இலவசமாக போட்டித் தேர்வு பயிற்சி – (Time Institute)
வெளியிடப்பட்ட தேதி : 11/05/2023
வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கல்லூரி படிப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மூன்று மாதம் போட்டித் தேர்வு பயிற்சி (Time Institute) மூலமாக திறமையான ஆசிரியர்களைக் கொண்டு கடகத்தூர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படவுள்ளது. எனவே தாங்கள் தங்களுக்கு தெரிந்த ஏழ்மையான மாணவ மாணவிகளை மேலே குறிப்பிட்டுள்ள லிங்கில் இன்று முதல் பதிவு செய்து பயன்பெற செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. வருகின்ற 20.05.2023 -ஆம் தேதியுடன் பதிவு செய்வது முடிந்து விடுவதால் முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அதிகபட்சம் 150 மாணவ மாணவிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.