மூடு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

தர்மபுரி மாவட்டத்தில்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மக்களுக்கு உதவி செய்ய பின்வரும் திட்டங்கள் தமிழ்நாட்டின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத்துறை மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

இலவச உணவு மற்றும் உறைவிடம்

நான்காம் வகுப்பு முதல் அனைவருக்கும் உணவு மற்றும் உறைவிடம்

தகுதிகள்

 1. ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள்.
 2. பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம் 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவியருக்கு பொருந்தாது
 3. வருமான வரம்பு ரூ.2.00 இலட்சம்

அணுக வேண்டியவர்கள்

விடுதி காப்பாளர்/காப்பாளினி

பாய் மற்றும் போர்வை

இலவச பாய் மற்றும் போர்வை

தகுதிகள்

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள்

அணுக வேண்டியவர்கள்

விடுதி காப்பாளர்/காப்பாளினி

இதர செலவினம்

சோப்பு,எண்ணெய் போன்ற பல்வகைச் செலவினத்திற்கு
கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ.75/-,பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூ.50 வழங்கப்படும்

தகுதிகள்

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள்

அணுக வேண்டியவர்கள்

விடுதி காப்பாளர்/காப்பாளினி

சிறப்பு உணவு கட்டணம்

 1. பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ரூ.20/-
 2. கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கு ரூ.40/- வழங்கப்படும்
 3. பொங்கல், குடியரசு தினம், தமிழ்வருடப்பிறப்பு, சுதந்திர தினம், தீபாவளி ஆகிய வழங்கப்படும்.

தகுதிகள்

ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள்

அணுக வேண்டியவர்கள்

விடுதி காப்பாளர்/காப்பாளினி

தனியார் மானிய விடுதிகள்

 1. தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் 36 விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு உணவுக் கட்டணம் வழங்கப்படும்
 2. பல்வகை செலவுகளான அகராதிஅட்லஸ்,கோரைப்பாய்,போர்வை,சீருடை,
  தையற்கூலி ஆகியவை வழங்கப்படும்

தகுதிகள்

ஆதிதிராவிடர்,பழங்குடியினர்,கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள்

அணுக வேண்டியவர்கள்

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

6 ஆம் வகுப்பில் மாணவ மாணவியரை சேர்த்தல்

சிறந்த தனியார் உண்டு,உறைவிடப் பள்ளிகளில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணவ மாணவியரை 6 ஆம் வகுப்பில் சேர்த்தல்

தகுதிகள்

 1. ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 5-ம் வகுப்பில் பயின்று அதில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்யப்பட்டு நற்பெயர் பெற்ற தரமான உண்டி உறைவிடப் பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேர்க்கப்பட்டு 12-ம் வகுப்பு வரை அங்கேயே பயில் அனுமதிக்கப்படுகின்றனர்
 2. சிறப்பு தேர்வுகள் மூலம் சிறந்த மாணவர்கள் தேர்ந்தேடுக்கப்படுகிறார்கள்
 3. வருமான வரம்பு இல்லை

அணுக வேண்டியவர்கள்

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

11-ஆம் வகுப்பில் மாணவ மாணவியரை சேர்த்தல்

சிறந்த உண்டு,உறைவிடப் பள்ளிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணவ மாணவியரை 11-ஆம் வகுப்பில் சேர்த்தல்

தகுதிகள்

 1. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருத்துவ ஆதிதிராவிடர் மாணவ,மாணவியர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்க வேண்டும்.
 2. வருமான வரம்பு இல்லை

அணுக வேண்டியவர்கள்

இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை

பராமரிப்பு படிகள்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உதவி தொகை

 1. விடுதியில் அல்லாதோர்: மாதம் ரூ.230/- முதல் ரூ.550/- வரை
 2. விடுதியில் உள்ளோர் :மாதம் ரூ.380/ முதல் ரூ.1200 வரை

தகுதிகள்

 1. 11 ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படிக்கும் மாணவர்கள்,பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம்
 2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டும்

அணுக வேண்டியவர்கள்

பள்ளி தலைமை ஆசிரியர்/மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்/கல்லூரி முதல்வர்

உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை:

 1. விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.7500/-
 2. முதுகலை பட்டப்படிப்பு/தொழில்நுட்ப பட்டப் படிப்பிற்கு ஆண்டிற்கு ரூ.8000/- ம் மானியமாக வழங்கப்படும்

தகுதிகள்

 1. பெற்றோர் பாதுகாவலர் ஆண்டு வருமான வரம்பு ரூ.2 இலட்சம்
 2. அரசு விடுதி அல்லாமல் கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயில்பவர்கள்

அணுக வேண்டியவர்கள்

கல்லூரி முதல்வர்

பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள்

இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் தரப்படுகின்றன

தகுதிகள்

அனைத்து மாணவ/மாணவியர்கள்

அணுக வேண்டியவர்கள்

பள்ளித் தலைமையாசிரியர்

இலவச சீருடைகள்

முதலாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை

தகுதிகள்

அனைத்து மாணவ/மாணவியர்கள்

அணுக வேண்டியவர்கள்

பள்ளித் தலைமையாசிரியர்/விடுதி காப்பாளர்/காப்பாளினி

இலவச மிதிவண்டி

மிதிவண்டி இலவசமாக வழங்கப் படுகிறது

தகுதிகள்

ஆதிதிராவிடர்,பழங்குடியினர்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர்/அரசு / அரசு உதவி பெறும் பள்ளி மாணவ மாணவியர்கள்

அணுக வேண்டியவர்கள்

பள்ளித் தலைமையாசிரியர்

சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி

பள்ளி/விடுதிகளில் தங்கிப் பயிலும் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது

தகுதிகள்

 1. ஆதிதிராவிடர் நல பள்ளிகள்
 2. அரசு பழங்குடியினர் குடியிருப்பு பள்ளிகள்
 3. ஆதிதிராவிடர் விடுதிகள்
 4. அரசு பழங்குடியினர் விடுதிகள்

அணுக வேண்டியவர்கள்

பள்ளித் தலைமையாசிரியர்

தீண்டாமை ஒழிப்பில் இருந்து பாதுகாப்பு

தீண்டாமை ஒழிப்பில் இருந்து ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கு உதவி

 1. கலவரங்களால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்/பழங்குடியினருக்கு உதவி
  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்புச் சட்டம் 2015 விதிகள் 2016
 2. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிரான வன்கொடுமைகளில் இருந்து பாதுகாத்தல்

தகுதிகள்

 1. கலவரங்களால் பாதிக்கப்பட்டு உயிரை இழக்கும் தனியரின் குடும்பத்திற்கு அதிகபட்சமாக ரூ.8.25 இலட்சம் நிதி உதவி வழங்கப்படும்
 2. அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி அல்லது அக்குடும்பத்திற்கு ஒரு வீடும் விவசாய நிலமும் வழங்கப்படும்

அணுக வேண்டியவர்கள்

மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

இலவச வீட்டுமனை பட்டா

இலவசமாக வீட்டுமனை பட்டா வழங்கப்படுகின்றன. கிராமப்புறத்தில் பேரூராட்சியில் 3 சென்ட் வழங்கப்படும்

தகுதிகள்

 1. வீட்டுமனை சொந்தமாக இருக்கக் கூடாது
 2. ஆண்டு வருமான வரம்பு கிராம பகுதியில் ரூ.40000/- நகரப் பகுதிகளில் ரூ.60000/-
 3. ஆதிதிராவிடர்/பழங்குடியினராக இருக்க வேண்டும்

அணுக வேண்டியவர்கள்

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

குடியிருப்புகளில் குடிநீர் வசதி

ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கும் இடங்களில் குடிநீர் வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதிகள் செய்து தருதல்

தகுதிகள்

குடிநீர் வசதி இல்லாமை

அணுக வேண்டியவர்கள்

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

மயானத்திற்குச் செல்லும் பாதை

மயானத்திற்குச் செல்லும் பாதை வசதிகள் செய்து தருதல்

தகுதிகள்

ஆதிதிராவிடர்/பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு மயானம் இல்லாமை.
மயானம் இருந்தால் அதற்குப் பொது பாதை வசதி இல்லாதது.

அணுக வேண்டியவர்கள்

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

இணைப்புச் சாலை

இணைப்புச் சாலை ஆதிதிராவிடர்/பழங்குடியினர் வசிக்கும் குடியிருப்புகளை இணைக்கும் இணைப்புச் சாலைகள் அமைத்து தருதல்

தகுதிகள்

குடியிருப்புகளுக்குச் செல்ல இணைப்புச் சாலை இல்லாமை

அணுக வேண்டியவர்கள்

திட்ட அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்

அண்ணல் காந்தி நினைவுப் பரிசு

12 ம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதல் மதிப்பெண் பெறும் இந்து ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவிக்கு இப்பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது இந்தப் பரிசுத்தொகை

 1. முதல் வருடத்திற்கு ரூ.2000/-
 2. அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1500/- வீதமும் வழங்கப்படுகிறது.

தகுதிகள்

 1. இந்து – ஆதி திராவிட மாணவ-மாணவியர் 12 ம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்று படிப்பைத் தொடர வேண்டும்
 2. வருமான வரம்பு இல்லை

அணுக வேண்டியவர்கள்

இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை, சென்னை

10-ம் மற்றும் 12 வது வகுப்பு மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவி தொகை

டாக்டர் அம்பேத்கர் தேசிய தகுதி கல்வி உதவித்தொகை:10-ம் வகுப்பு

 1. 1 ல் பரிசு ரூ.60000/-
 2. 2 ம் பரிசு ரூ.50000/-
 3. 3 ம் பரிசு ரூ.40000/-

12 ம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்கள் அறிவியல்,கலை,மற்றும் வணிகவியல்

 1. 1ல் பரிசு ரூ.60000/-
 2. 2 ம் பரிசு ரூ.50000/-
 3. 3 ம் பரிசு ரூ.40000

தகுதிகள்

வருமான வரம்பு ரூ.1.00 இலட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்

அணுக வேண்டியவர்கள்

இயக்குநர், நியூடெல்லி அம்பேத்கர் பவுண்டேசன் தமிழ்நாடு இடைநிலைக் கல்வி வாரியம்

மாநில அளவிலான பரிசுத் தொகை (12 ம் வகுப்பு)

12 ம் வகுப்பு சிறந்த மாணவர்களுக்கு மாநில அளவிலான விருது

 1. 1ல் பரிசு ரூ 50,000
 2. 2 ம் பரிசு ரூ 30,000
 3. 3 ம் பரிசு ரூ.20,000

தகுதிகள்

மாநில அளவில் முதல் 3 இடங்கள் பெறும் மாணவர்கள்

 1. ஆதிதிராவிடர்/பழங்குடியினர்/கிருத்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் மாணவர்கள்
 2. தமிழை ஒரு படமாக படித்திருக்க வேண்டும்
 3. வருமான வரம்பு இல்லை

அணுக வேண்டியவர்கள்

மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்