மூடு

நினைவுச் சின்னங்கள்

சென்றாய பெருமாள் திருக்கோவில் :

சென்றாய பெருமாள் திருக்கோவில்

தர்மபுரியில் இருந்து 8 KM தொலைவில் உள்ளது. அதியமான் கோட்டையில் உள்ள சென்றாய பெருமாள் கோவில், மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் விதவிதமான வண்ண ஓவியங்கள் எழுத்து பொறிப்புகளுடன் உள்ளன. ராமாயணம், மஹாபாரதம், பகவத்கீதை ஆகியவை இடம் பெற்று உள்ளது






தியாகி சுப்ரமணிய சிவா மண்டபம் :

தியாகி சுப்ரமணிய சிவா மண்டபம்

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்கள் மதுரை மாவட்டம், வத்தலக்குண்டு என்ற ஊரில் ராஜம் ஐயர், நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்களுக்கு 04.10.1884 அன்று பிறந்தார். அவர் தனது 12-ஆம் வயதில் நாட்டுப்பற்றும், விடுதலைக்காக தொண்டாற்ற வேண்டும் என்ற தீராத வேட்கையும் கொண்டிருந்தார்.

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் “ஆரிய சமாஜத்தைச்” சேர்ந்த ஸ்ரீதாகூர்கான் விடுதலைச் சொற்பொழிவைக் கேட்டு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1907-இல் திருவனந்தபுரத்தில் “தர்ம பரிபாலன சமாஜம்” என்ற அமைப்பை ஏற்படுத்தி, இளைஞர் சமுதாயம் வீறு கொள்ள சுதந்திர வேட்கையைத் தனது சொற்பொழிவு மூலம் ஏற்படுத்தினார். இதனால் திருவனந்தபுரம் சமஸ்தானத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். 07.07.1908-ஆம் ஆண்டு ஆங்கில அரசு சதிவழக்கினை இவர் மீது சுமத்தி 6 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தது.

1913-இல் சென்னை வந்த சுப்பிரமணிய சிவா “ஞானபானு” மற்றும் “பிரபஞ்சமித்திரன்” ஆகிய மாத, வாரப் பத்திரிகையைத் தொடங்கி இந்தியா விடுதலை பொறுவதின் அவசியம் குறித்தும், விடுதலைப் போராட்டம் குறித்தும் பல கட்டுரைகளையும், தேசத் தலைவர்களின் அரிய தொண்டினையும் அறிவிப்புகளாக வெளியிட்டார். சென்னை, கல்கத்தா, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற பகுதிகளுக்குச் சென்று தொழிலாளர் போராட்டங்களை நடத்தி ஆங்கில அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தார். இதனால் ஆங்கிலேய அரசு, சுப்பிரமணிய சிவாவிற்கு கொடுமையான சிறைத் தண்டனை விதித்து, தாங்கொண்ணா சித்ரவதைக்கு உள்ளாக்கியது. இதனால் தொழுநோய் என்ற கொடிய நோயால் தாக்கப்பட்டு உடல் நைந்தார். தனது இறுதிக்காலத்தில் பாரதமாதா கோயில் கட்டிடவும், இந்திய மக்கள் அனைவரும் மொழி, சாதி, சமய வேறுபாட்டைக் களைந்து ஒன்றுபட்டு வாழவும் உழைத்தார். தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் பாரதமாதா ஆலயம் நிறுவும் முயற்சியில் ஈடுபட்டபோது 23.07.1925-இல் நோய்வாய்ப்பட்டு இறந்தார்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் ரூ.40 இலட்சம் மதிப்பீட்டில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபம் அமைக்கப்பட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களால் 18.07.2011 அன்று திறந்து வைக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணிமண்டபத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் அக்டோபர் திங்கள் 4 ஆம் நாளன்று அன்னாரின் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.



சர் தாமஸ் மன்ரோ தூண் :

சர் தாமஸ் மன்ரோ தூண்

ஏப்ரல் 1792 முதல் மார்ச் 1799 வரை, தர்மபுரி சங்கம், பாரமஹாலில் வருவாய் கண்காணிப்பாளர் உதவியாளராக இருந்ததால், தர்மபுரி சங்கத்தை குறிக்க இந்த தூண் உருவாக்கப்பட்டது.