மூடு

திட்டங்கள்

Here appears all public schemes formulated by district administration. Search facility is provided to search a particular scheme from n numbers of schemes.

Filter Scheme category wise

வடிகட்டி

சுகாதாரம்

1.அம்மா குழந்தைகள் நலபெட்டகம் அனைத்து அரசு மருத்துவனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்கும் பிரசவத்திற்கு ரூ.1000 மதிப்பிலான அம்மா நலப் பெட்டகம் இலவசமாக வழங்கப்படுகிறது. இப்பெட்டகத்தில் 16 பொருட்கள் அடங்கியுள்ளது. குழந்தைக்கு – ஆடை துண்டு படுக்கை கொசு வலை எண்ணெய் சோப் நகவெட்டி விளையாட்டுப் பொருள் ஷாம்பு, தாய் கை கழுவும் திரவம் சோப் சௌபாக்ய லேகியம் மேற்கூறிய பொருட்கள் பாதுகாப்புடன் கூடிய பெட்டியில் வைத்து பிரசவித்த தாய்மார்களுக்க வழங்கப்படுகிறது 2.தேசிய வளர் இளம் பருவத்தினர் நலத்திட்டம் வாரந்திர இரும்புச்சத்து மாத்திரை மற்றும் போலிக் அமிலம் திட்டம் அடிப்படையில் இளம் பருவத்தினருக்கான மருத்துவ சேவை…

வெளியிடப்பட்ட தேதி: 16/09/2021
விவரங்களை பார்க்க

பொதுப்பணித்துறை செயல்பாடுகள்

பொதுப்பணித்துறை தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல முயற்சிகள் எடுத்து அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பொறியியல் சிறப்பறிவுத் திறத்துடன் பல்வேறு அரசுத் துறைகளின் கட்டடப் பணிகளை செயல்படுத்துவதில் மிகவும் பழமைவாய்ந்த முதன்மையான பங்கு வகிக்கும் தொழில் நுட்ப துறையாகும். இத்துறையின் முக்கிய பங்குஅரசின் மூலதனச் சொத்துக்களை உருவாக்குவது மற்றும் வியப்புறும் வகையில் விலைமதிப்புள்ள நினைவு சின்னங்களும் பொதுக் கட்டடங்களும் உருவாக்குவதாகும். அரசின் அனைத்து பொறியியல் துறைகளுக்கும் தாய்த் துறையாக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு விளங்குகிறது. நாட்டின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டு ஊக்கத்துடனும், வியக்கத்தக்க கலை நயத்தோடும்,…

வெளியிடப்பட்ட தேதி: 15/09/2021
விவரங்களை பார்க்க

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா)

அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் வேளாண்மை மற்றும் அதனை சார்ந்த துறைகளில் உள்ள தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பது ஆகும். மேலும், அட்மா திட்டத்தின் வாயிலாக இதர துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகளுக்கு கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கம். அட்மா திட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பட்டுவளர்ச்சித்துறை, மீன் வளர்ப்புத்துறை, வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய துறைகள் ஒன்றிணைந்து அவ்வப்போது விவசாயிகளுக்கு பயிற்சி, கண்டுனர்தல் சுற்றுலா, செயல்விளக்கங்கள், பண்ணைப்பள்ளி மற்றும் வெளிமாநில சுற்றுலாக்களின் மூலம் விவசாயிகளுக்கு புதிய…

வெளியிடப்பட்ட தேதி: 09/09/2021
விவரங்களை பார்க்க

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

1.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சிறு பழ பயிர்கள்: (ரம்புட்டான், லிச்சி, பெர்சிமோன், அவகாடோ, கிவி, பேஷன் பழம் போன்றவை) ஒரு எக்டருக்கு ரூ.30000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. பாரம்பரிய பழம் மற்றும் காய்கறி சாகுபடி திட்டம், ஒரு எக்டருக்கு ரூ.15000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. வறண்ட நில பயிர்கள் (நாவல், நெல்லி, புளி, முதலியன) ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. காய்கறி விதை கிட் விநியோகம் (கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, பாகற்காய், தக்காளி, கொத்தவரை), ஒரு கிட்டுக்கு ரூ.10 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 கிட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது திட்டத்தின் பயனை பெறுவதற்குகான…

வெளியிடப்பட்ட தேதி: 07/09/2021
விவரங்களை பார்க்க

மின் ஆளுமை திட்டம்

மின்-மாவட்டம் என்பது தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் மாநில பணிமுறை திட்டமாகும். பொது சேவை மையங்களானது அரசு மற்றும் பொதுத்துறை சேவைகளை கிராமபுற மக்களுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட அளவில் மாவட்ட மின் ஆளுமைச் சங்கமானது மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது தொடக்கத்தில் 5 வகையான வருவாய்ச் சான்றிதழ்கள் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2014-ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் 01-12-2015-ல் இருந்து இணையவழி உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அல்லாத பட்டா மாற்ற சேவைகளும், 01-03-2015-ல் இருந்து சமூக நலத்துறையின் 5 வகையான திருமண நிதி…

வெளியிடப்பட்ட தேதி: 03/09/2021
விவரங்களை பார்க்க

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை

சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முந்தைய குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க இறக்குமதி செய்யப்பட்ட அயற்நாட்டு மதுபானங்களை கள்ளத்தனமாகக் கடத்துதல், விற்பனை செய்தல், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்தல், தெளிந்த சாராவி கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியுள்ளவர்களை மாவட்டவாரியாகக் கண்டறிந்து, அவர்களை மறுபடியும் இக்குற்றத்தில் ஈடுபடாவண்ணம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடு மற்றும் கறவை மாடுகள் வளர்த்தல், ஊதுவத்தி, கற்பூரம் , உடனடி சாம்பிராணி, மெழுகுவர்த்தி, காகிதக்குவளை, துணி…

வெளியிடப்பட்ட தேதி: 25/08/2021
விவரங்களை பார்க்க

சமூக நலத்துறை திட்டங்கள்

சமூகநலத்துறையின் மூலம் (தருமபுரி மாவட்ட சமூகநல அலுவலகம்) வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. 1.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம் : வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன் (அ) திருமணத்திற்கு முதல் நாள் வரை (மக்கள் கணிணி மையத்தின் மூலம்) விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி மற்றும் பட்டப்படிப்பு/பட்டயம் படித்தவர்கள், பழங்குடியினர் 5ம் வகுப்பு வரை…

வெளியிடப்பட்ட தேதி: 24/08/2021
விவரங்களை பார்க்க

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலம் பல்வேறு நலத்திட்டங்கள்

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தருமபுரி. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளரின் தலைமையில் இயங்கி வருகிறது. மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களையும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களையும், சிறுபான்மையினர் நல இயக்குநர் சிறுபான்மையினர் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர். மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் கீழ்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்: 1. கல்வி உதவித்தொகை வழங்குதல் 2. ஊரக பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் ….

வெளியிடப்பட்ட தேதி: 23/08/2021
விவரங்களை பார்க்க