மூடு

நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள்

தர்மபுரி பகுதியில் வாழும் மக்கள், பண்டிகையை குதூகலமாக கொண்டாடி வருகின்றனர்.

தைப் பொங்கல் :  

பொங்கல், இந்த பகுதியில் மிகவும் நேசிக்கப்படும் திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ம் தேதி வரும்.

ஆடி பெருக்கு (ஆடி – 18) :

ஆடி [ஜூலை-ஆகஸ்ட்] மற்றும் ஆடி பெருக்கு விழா அல்லது ஆடி மாதத்தின் 18 வது நாள் [ஜூலை- ஆகஸ்ட்] ஓகேனக்கல் மற்றும் தீர்த்தமலை ஆகிய இடங்களில் கொண்டாடபடுகிறது.

தீர்த்தமலை கோவில்  திருவிழா :

மாசி மாதம் – பிரம்மோற்சவம் – 10 நாட்கள் – வாகனத்தில் சுவாமி புறப்பாடு – 7ம் நாள் தேரோட்டம் – 5 ம் நாள் திருக்கல்யாணம், 10 ம் நாள் சத்தாபரண உற்சவம்(சயன உற்சவம்).சித்திரை மாதம் வருடப்பிறப்பு – 365 லிட்டர் பால் அபிஷேகம் (உச்சி கால பூஜை) நவராத்திரி, ஆடி 18 திருவிழா ஆகியவை இத்தலத்தில் விசேஷம்..பவுர்ணமி அன்று இரவு 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். அன்று இரவு இத்தலத்தில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது.

 சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இத்தலத்தில் மாதந்தோறும் பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

 ஆங்கில, தமிழ்ப்புத்தாண்டு தினங்களன்று கோயிலில் மிக அதிக அளவு எண்ணிக்கையிலான பக்தர்கள் கூடுகிறார்கள்.

கால பைரவர் கோவில் 

பைரவர் பூஜை : 

 ஆதிசங்க பைரவர், ருத்ர பைரவர், குரோத, கபால, சம்கார, உன்மந்த, சண்ட, உக்கிர என 8 வகையான பைரவர்கள் உள்ளனர்.ஓவ்வொரு பைரவருக்கும் 8 அவதாரங்கள் உள்ளது. மொத்தம் 64 பைரவர்களுக்கும் பூஜை நடக்கும்.

அபிஷேக வாரம் : 

மாதம் ஒரு முறை தேய்பிறை அஷ்டமியில் நடக்கும். காலை 6 மணிக்கு அதிருத்ர யாகம், அஷ்ட பைரவ யாகம், சோலச கணபதி யாகம், சோட லக்ஷ்மி யாகம், 9 நவகிரக யாகம், 27 நட்சதிர யாகம்,12 இராசி பரிகார இவையனைத்தும் 6 மணி முதல் 9 மணி வரை நடக்கும்.9.30 மணிக்கு மேல் 64 வகையான திரவிகளால் அபிஷேகம் நடக்கும்.உபசார பூஜைகள் நடக்கும்.இரவு 11மணிக்கு சத்ரு சம்ஹார ஓமம், குருதி பூஜைகள் நடக்கும். இதில் 500 கிலோ மிளகாய் , 108 கிலோ மிளகு , 8 பந்தம் வைத்து பூஜைகள் நடக்கும். இப்பூஜையில் மிளகாயை ஓமத்தில் போடும்போது சிறிதும் நெடி வருவதில்லை

சென்றாய பெருமாள் கோவில் :

இது 9ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட கோவில். இதன் மற்றொரு பெயர் சின்னதிருப்பதி. பெருமாள் கோவிலின் துணை பெயர்  ஸ்ரீதேவி, பூதேவி, சமேக சென்ராய பெருமாள். இக்கோவிலானது கிழக்கு நோக்கி உள்ளது.கிருஷ்ண தேவராயருக்கு இக்கோவிலில்தான் திருமணம் நடைபெற்றது.கோவில் மண்டபத்தில் திருமங்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் , நம்மாழ்வார் என மூன்று ஆழ்வார்கள் உள்ளனர்

பூஜைகள்:

இங்கு தினசரி பூஜைகள் நடத்தப்படுகின்றன.
வைகுண்ட ஏகாதேசி அன்று சொர்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெறும்.
சித்ரா பௌர்ணமி அன்று 10 நாள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

சோமேஸ்வரர் கோவில் : 

சோமேஷ்வரர் கோவிலில் கடவுள் மேற்கு பார்த்த ஈஸ்வரன் உள்ளார்.இக்கோவில் மிகவும் சிறப்பானது. இக்கோவிலில் கடவுள்கள் மேற்கு பார்த்த ஈஸ்வரன், மேற்கு பார்த்த விநாயகர், மேற்ர்க்கு பார்த்த முருகர் தெற்கு நோக்கிய சோமாம்பிகை, தெற்கு நோக்கிய தட்ச்சிணா மூர்த்தி, தேற்கு நோக்கிய சண்டிகேஸ்வரர் கடவுள்கள் வீற்றிருக்கின்றனர்.மேற்க்கு பார்த்த ஈஸ்வரன் கோவில் வேரெங்கும் இல்லை. இக்கோவிலானது சித்தர்கள் வழிபட்ட ஸ்தலம் ஆகும். அதன் பிறகு ஷைண மதம் வழிபாடு செய்து திருக்கோவில் ஷைணமத திருச்சிலை இங்கு உள்ளது.

பூஜைகள் :

இக்கோவிலில் தினப்பூஜை, பிரதோஷம் பௌர்ணமி சிறப்பு பூஜை நடைபெறும்.மாசி மாதம் மகம் நட்சத்திரம் அன்று முதல் 3 நாட்களுக்கு பூஜை நடைபெறும். இக்கோவிலில் சூரிய ஒளியானது நுழைவாயில் வழியாக சூரிய வெளிச்சம் கடவுள் மேல் அந்த 3 நாட்கள் விழும்