கல்வி
கல்வியறிவு என்பது மனித வாழ்க்கையை சிறப்பாக படைப்பதில் மிக முக்கிய கருவியாக செயல்படுகிறது. ஒருங்கிணைந்த குடியுரிமை சமுதயாத்தை உருவாக்கவும், அறிவு விழிப்படையச் செய்யவும் விழுமியக் கல்வி மிக அவசியமானதாகும். இந்த அடைவினை நம் இந்திய அரசு ஓரளவு எட்டியுள்ளது.
கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி, அனைவருக்கும் தரமான கல்வியினை வழங்குவதே அனைவருக்கும கல்வி இயக்கத்தின் மிக முக்கிய தலையாய பணியாகும். 6-14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் தரமான மற்றும் இலவச கல்வியினை வழங்குவதே அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த நோக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான பொறுப்பை பகிர்ந்து கொள்கின்றன.
பள்ளிகளின் உள்கட்டமைப்பு தேவைகள் மற்றும் தர மேம்பாட்டு நடவடிக்கைகள் மாநில அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் செயல்திட்டத்தின் முக்கிய பணியாகும். பள்ளிச்செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி வழங்குவது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மற்றொரு முக்கிய பணியாகும். உள்ளடங்கிய கல்வியானது மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு கற்றல் வாய்ப்பினை வழங்குகிறது.
மாநில அரசின் உத்தரவாதக் கொள்கையின் கீழ், அரசமைப்பு சட்டப்பிரிவு 45-ன் படி ‘மாநில அரசானது 10 ஆண்டு காலத்திற்குள் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக்கல்வியினை 14 வயதிற்குள் வழங்கிடுதல் வேண்டும்”. நமது மாநில அரசானது 100% மாணவர் சேர்க்கைக்காக மாணவர்களுக்கு இலவச சீருடைகள், புத்தகப்பைகள், எழுதுப்பொருட்கள், புத்தகங்கள், குறிப்பேடுகள், வரைபடப்புத்தகம், வண்ண எழுதுகோல்கள், மடிக்கணினி, இலவச பேருந்து பயண அட்டை மற்றும் உதவித்தொகை ஆகியவற்றை வழங்கி வருகிறது.நாட்டின் முன்னேற்றத்திற்கான கல்வித்தரத்தினை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்துவதில் தமிழக அரசு முக்கிய பங்கு வகிக்கிறது.
தொடக்க மற்றும் உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு சில அடிப்படை பயிற்சிகள் வழங்குவது அவசியமானதால், ஆசிரியர்களுக்கு குழந்தைகளை கையாளவும், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அணுகுமுறை, நடத்தை, உடல்நலம் ஆகியவை குறித்தும் பணியிடைப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.கல்வி மாணவர்களின் வாழ்வில் எளிதில் மாற்றத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது. எனவே கல்வி ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அடிப்படை உரிமையாகும்.
வ.எண் | ஒன்றியம் | ஆசிரியர்கள் எண்ணிக்கை இலக்கு | இலக்கு : I – II | இலக்கு : III – IV | அடைவு : I – II | அடைவு : III – IV | மொத்தம் |
---|---|---|---|---|---|---|---|
1 | தருமபுரி | 367 | 147 | 220 | 131 | 196 | 327 |
2 | நல்லம்பள்ளி | 420 | 168 | 252 | 148 | 222 | 370 |
3 | பென்னாகரம் | 437 | 175 | 262 | 148 | 222 | 370 |
4 | பாலக்கோடு | 343 | 137 | 206 | 106 | 160 | 266 |
5 | காரிமங்கலம் | 297 | 119 | 178 | 97 | 146 | 243 |
6 | மொரப்பூர் | 353 | 141 | 212 | 119 | 179 | 298 |
7 | அரூர் | 403 | 161 | 242 | 142 | 212 | 354 |
8 | பாப்பிரெட்டிப்பட்டி | 221 | 88 | 133 | 83 | 125 | 208 |
மொத்தம் | 2841 | 1136 | 1705 | 974 | 1462 | 2436 |
வ.எண் | ஒன்றியம் | தலைமை ஆசிரியர்கள் இலக்கு | அடைவு | % |
---|---|---|---|---|
1 | தருமபுரி | 25 | 25 | 100 |
2 | நல்லம்பள்ளி | 30 | 30 | 100 |
3 | பென்னாகரம் | 30 | 30 | 100 |
4 | பாலக்கோடு | 26 | 26 | 100 |
5 | காரிமங்கலம் | 28 | 25 | 89 |
6 | மொரப்பூர் | 18 | 18 | 100 |
7 | அரூர் | 26 | 27 | 104 |
8 | பாப்பிரெட்டிப்பட்டி | 17 | 17 | 100 |
மொத்தம் | 200 | 198 | 99 |
வ.எண் | வட்டார வள மையத்தின் பெயர் | மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை (ஊரகம்) | மொத்த குடியிருப்புகளின் எண்ணிக்கை (நகரப்புறம்) | மொத்தம் |
---|---|---|---|---|
1 | தருமபுரி | 380 | 33 | 413 |
2 | நல்லம்ப்பள்ளி | 367 | 0 | 367 |
3 | பாலக்கோடு | 405 | 33 | 438 |
4 | பென்னாகரம் | 327 | 33 | 360 |
5 | காரிமங்கலம் | 429 | 15 | 444 |
6 | மொரப்பூர் | 375 | 30 | 405 |
7 | அரூர் | 385 | 18 | 403 |
8 | பாப்பிரெட்டிப்பட்டி | 159 | 30 | 189 |
மொத்தம் | 2827 | 192 | 3019 |
Sl. No | பிளாக் | பள்ளியின் முதல் நிலை எண் | முதன்மை நிலை செலவினம் | பள்ளி இடத்தை அடிப்படையாக கொண்டது | மேல்நிலை நிலை செலவினம் | மொத்த செலவு |
---|---|---|---|---|---|---|
1 | தர்மபுரி | 135 | 675000 | 62 | 434000 | 1109000 |
2 | அரூர் | 157 | 785000 | 70 | 490000 | 1275000 |
3 | காரிமங்கலம் | 146 | 730000 | 60 | 420000 | 1150000 |
4 | மொரப்பூர் | 132 | 660000 | 58 | 406000 | 1066000 |
5 | நல்லம்பள்ளி | 160 | 800000 | 77 | 539000 | 1339000 |
6 | பாலக்கோடு | 151 | 755000 | 66 | 462000 | 1217000 |
7 | பாப்பிரெட்டிப்பட்டி | 80 | 400000 | 44 | 308000 | 708000 |
8 | பென்னாகரம் | 200 | 1000000 | 112 | 784000 | 1784000 |
மொத்தம் | 1161 | 5805000 | 549 | 3843000 | 9648000 |
S.No | பிளாக் | KGBV பள்ளிகளின் எண்ணிக்கை | இலக்கு | அடைந்தது |
---|---|---|---|---|
1 | பென்னாகரம் | 1 | 100 | 100 |
2 | காரிமங்கலம் | 1 | 100 | 100 |
3 | பாலக்கோடு | 1 | 100 | 100 |
மொத்தம் | 3 | 300 | 300 |