மூடு

பரிசுத்த இடங்கள்

அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் :

அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில்

தர்மபுரி நகரத்தில் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வர் திருக்கோவில் அமைந்து உள்ளது .இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார்.

இரண்டரை டன் எடையுள்ள வியன் மிகு தொங்கும் தூண்கள் இரண்டை பெற்றிருக்கும் சிவத்தலம் இது. தாய்மையின் சிறப்பை உயர்த்தி சொல்லும் வகையில் காமாட்சி அம்பாளின் சன்னதி ஸ்வாமியின் சன்னதியை விட உயரமாக இருக்குகிறது.




தீர்த்தமலை :

தீர்த்தமலை

இத்திருக்கோவில் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது.இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத் தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார்.

மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளதுகிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது .வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது. தெற்கே எம தீர்த்தம் உள்ளது , இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிட தக்கது.






சென்றாய பெருமாள் திருக்கோவில் :

சென்றாய பெருமாள் திருக்கோவில்

தர்மபுரியில் இருந்து 8 KM தொலைவில் உள்ளது .அதியமான் கோட்டையில் உள்ள சென்றாய பெருமாள் கோவில், மத்திய தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இக்கோவில் மண்டப விதானத்தில் விதவிதமான வண்ண ஓவியங்கள் எழுத்து பொறிப்புகளுடன் உள்ளன. ராமாயணம், மஹாபாரதம், பகவத்கீதை ஆகியவை இடம் பெற்று உள்ளது.






கால பைரவர் கோவில் :

 

கால பைரவர் கோவில்
பெங்களூர் மற்றும் சேலம் உள்ளிட்ட தர்மபுரி மாவட்ட சுற்றியுள்ள பகுதிகளிலும் மிக பிரபலமான கோவில். இந்தியாவில், இரண்டு கால பைரவர் கோவில் இருக்கின்றன உள்ளன. அவற்றில் ஒன்று தர்மபுரி கால பைரவர் கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் கர்நாடகா முக்கியமாக பெங்களூர் மக்கள் மற்றும் ஆந்திர பிரதேச் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கோவில். தர்மபுரி கால பைரவர் கோவில் தமிழ்நாடு இந்து மதம துறையின் கீழ் வருகிறது. இந்தியாவில் இரண்டு இடங்களில் மட்டுமே காலபைரவர் கோவில் உள்ளது. முதல் இடம் காசியில் தட்சிண காசி (தென்காசி காலபைரவர்) உள்ளார். இரண்டாம் இடம் தர்மபுரி அதியமான் கோட்டையில் (இங்கு) உள்ளது. ஆதியும் அந்தமும் இவரே. மொத்தம் 64 பைரவர்கள் உள்ளனர். இந்த 64 பைரவர்களில் முதன்மை வாய்ந்த பைரவர் உன்மந்திர பைரவர்.