மூடு

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

சேலம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் பகுதி அலுவலகமாக இயங்கி வந்த தருமபுரி அலுவலகம் 02.10.1965 முதல் வட்டாரப் போக்குவரத்து அலுவலகமாக இயங்கி வருகிறது. 30.04.1984 முதல் சொந்த கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

ஓட்டுநர் தேர்வுத்தளம் :

மேற்படி அலுவலக கட்டிடத்திலேயே புதிய ஓட்டுநர் தேர்வுத் தளம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் நபர்களுக்கு முறையாக தேர்வு நடத்தி தகுதியுள்ளவார்களுக்கு ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் அரூர் மற்றும் பாலக்கோடு ஆகிய இடங்களில் பகுதி அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன

வாகனங்களின் எண்ணிக்கை விவரம் நிலவரப்படி (01.03.2018)
வ.எண் வாகன வகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தருமபுரி பகுதி அலுவலகம் அரூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பாலக்கோடு மொத்தம்
1. தனியார் பேருந்து தடம் 97 35 22 154
2 உபரி 93 22 15 130
3. அரசு பேருந்து தடம் 356 0 0 356
4. உபரி 38 0 0 38
5. மினி பேருந்து 22 17 15 54
6. சரக்கு வாகனம் 1350 964 364 2678
7 தேசிய அனுமதி சீட்டு (சரக்கு வாகனம்) 1805 1066 587 3458
8. அனுமதி சீட்டு அற்ற சரக்கு வாகனம் 2019 957 307 3283
9. கல்வி நிறுவன வாகனம் 668 563 233 1464
10. தனியார் பணி வாகனம் 5 0 0 5
11. சாதாரண சீருந்து / சுற்றுலா சீருந்து 187 63 18 268
12. அகில இந்திய சுற்றுலா சீருந்து 8 0 0 8
13. மேக்ஸி கேப் 305 242 36 583
14. ஆட்டோ ரிக்க்ஷா 1741 128 280 2149
15 ஷேர் ஆட்டோ 50 0 0 50
16. சுற்றுலா ஆம்னி பேருந்து 5 1 1 7
17. போக்குவரத்து வாகனம் 8753 4060 1879 14692
18. போக்குவரத்து அல்லாத வாகனம் 367762 118038 24261 510061
19. மொத்தம் 376515 122098 26140 524753
புதியதாக பதிவுசெய்யப்பட்ட வாகனங்களின் வருடம்
வருடம் போக்குவரத்து அல்லாத வாகனங்கள் போக்குவரத்து வாகனங்கள் மொத்தம்
2015-2016 12470 1434 13904
2016-2017 14953 1317 13904
2017-2018 14985 1306 16291
ஓட்டுநர் உரிமங்கள் வழங்கிய விபரம்
ஆண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், தருமபுரி பகுதி அலுவலகம், அரூர் பகுதி அலுவலகம், பாலக்கோடு மொத்தம்
2014-2015 5675 7510 2143 15328
2015-2016 5501 6466 1976 15328
2016-2017 6454 7636 2310 30656
2017-2018 Up to 01.03.18 14706 8080 2412 61312

சாலை பாதுகாப்பு :

  1. பழகுநர் உரிமம் பெறுவதற்காக வருகின்ற அனைத்து மனுதாரர்களுக்கும் சாலையில் பயன்படுத்தப்படும் குறியீடுகள் மற்றும் அதன் செயற்பாடுகள் குறித்து விபரமாக பயிற்சிகள் நடத்தப்படுகிறது. பிறகு கணினி மூலம் தேர்வு நடத்தப்படுகிறது, அதில் தேர்ச்சியடைந்த பின்னரே பழகுநர் உரிமம் வழங்கப்படுகிறது.
  2. சாலையில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான குறியீடுகள் சம்மந்தமாக தேர்வு நடத்தி அதில் தேர்ச்சி பெற்ற பின்னரே ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
  3. ஓவ்வொரு ஆண்டும் சனவரி 1ந் தேதி முதல் 7 வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வார விழா போக்குவரத்து துறையினரால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் கீழ்க்கண்டவாறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
  4. ஓட்டுநர்களுக்கு இலவச கண் பரிசோதனை தேர்ந்த மருத்துவர்கள் மூலம் நடத்தப்படுகிறது.
  5. சாலை பாதுகாப்பு விளக்க மற்றும் விழிப்புணர்வு பேரணி துண்டு பிரசுரங்கள் விநியோகம் – அதிக வேகம், அதிக பாரம் சிறப்பு தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
  6. மாசுகட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து அதிக ஒளி வீசும் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்களை தணிக்கை செய்தல்
  7. பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன
  8. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிலையங்களில் போக்குவரத்து விதிகள் குறித்து அறிவிப்பு பலகைகள் பொறுத்தப்பட்டுள்ளன
சாலை பாதுகாப்பு நிதி ஒப்புதல் விவரங்கள்
வ.எண் ஆண்டு நிதி ஒப்புதல் விவரங்கள்
1. 2015-2016 Rs. 1,80,000/-
2. 2016-2017 Rs. 2,00,000/-
3. 2017-2018 Rs. 16,30,000/-

சாலை விபத்துகளை தவிர்த்தல் :

2017 ஆம் ஆண்டில் குடி போதையில் வாகனம் இயக்கிய குற்றத்திற்காக, 456 ஓட்டுநர் உரிமங்களும், உயிரிழப்பு விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக 35 ஓட்டுநர் உரிமங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன. அடிக்கடி விபத்துக்கள் நேரிடும் இடங்களை ஆய்வு செய்து விபத்துக்களை தவிர்க்கின்ற காரணங்களைக் கண்டறிந்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் காவல் துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான முன்மொழிவுகள் இணைக்கப்பட்டுள்ளன. அடிக்கடி வாகன தணிக்கைகள் மேற்கொண்டு அதிக பாரம், அதிக வேகம், அதிக ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை கைப்பற்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்தகைய செயல்களின் மூலம் விபத்துகள் நடப்பதை கட்டுப்படுத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின் படி கல்வி நிறுவன வாகனங்களின் தாளாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கு அவ்வப்போது சிறப்புக் கூட்டம் நடத்தி தக்க அறிவுரைகள் வழங்கி அதன்படி செயல்படுகின்றனவா? என்பதை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.