மூடு

சுகாதாரம்

இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை,தருமபுரி: அமைப்புமுறை

தருமபுரி மாவட்டத்தில் குப்பூர் என்னும் இடத்தில் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகம், இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககத்தின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கி வருகிறது. இது தருமபுரி நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இணை இயக்குநர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை
வ.எண் தலைப்பு விபரம்
1 பெயர் மரு.மா.கி.பொன்னுராஜ், எம்.பி.பி.எஸ்., டி.ஏ.,
2 பதவி இணை இயக்குநர்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,குப்பூர் (அஞ்சல்), தருமபுரி.
3 துறை விலாசம் இணை இயக்குநர் அலுவலகம்,மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்,குப்பூர் (அஞ்சல்),தருமபுரி–636704
4 தொலைபேசி 1 04342-262682
5 தொலைபேசி 2 04342-262684
6 அலைபேசி எண் 9444982663
7 மின்னஞ்சல் dharmapuri.jdhs[at]gmail[dot]com
கீழ்கண்ட மருத்துவமனைகள் இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள், தருமபுரி அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது :
வ.எண் பெயர் பதவி தொலைபேசிஎண். மின்னஞ்சல்முகவரி
1 மரு.எஸ்.கனிமொழி, எம்.பி.பி.எஸ்., எம்.எச்.ஏ. முதன்மை மருத்துவ அலுவலர்,அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை,பென்னாகரம். 9489050905 pennagaram[dot]dms][at]gmail[dot]com
2 மரு.சி.ராஜேஷ்கண்ணன், எம்.பி.பி.எஸ்., டி.ஏ. முதன்மை மருத்துவ அலுவலர்,அரசு மருத்துவமனை,அரூர். 9600818001 Harur[dot]dms[at]gmail[dot]com
3 மரு.ஜி.மணிமேகலை, எம்.பி.பி.எஸ்., டி.ஜி.ஓ. முதன்மை மருத்துவ அலுவலர்,அரசு மருத்துவமனை,பாலக்கோடு. 9443441155 palacode[dot]dms[at]gmail[dot]com
4 மரு.கே.என்.பொன்னியின் செல்வன், எம்.பி.பி.எஸ். முதன்மை மருத்துவ அலுவலர்,அரசு மருத்துவமனை,பாப்பிரெட்டிபட்டி. 9585249497 pappireddipatti[dot]dms[at]gmail[dot]com
5 மரு.ஆர்.புவனேஸ்வரி, எம்.பி.பி.எஸ்., டி.டி.வி.எல். முதன்மை மருத்துவ அலுவலர்,அரசு தொழுநோய் மருத்துவமனை 9080039985 ddl[dot]dharmapuri[at]gmail[dot]com
மருத்துவமனையின் பெயர்,படுக்கைகள் மற்றும் பிரிவுகள்
வ.எண். மருத்துவமனையின் பெயர் படுக்கைகள் பிரிவுகள்
1 அரசு தலைமை மருத்துவமனை, பென்னாகரம் 116
  1. அரசு தலைமை மருத்துவமனை
  2. விஷமுறிவு சிகிச்சை மையம்
  3. பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு
  4. டயாலசிஸ் மையம்
  5. இரத்த சேமிப்பு வங்கி
2 அரசு மருத்துவமனை, அரூர் 65
  1. வட்ட மருத்துவமனை
  2. தேசிய தரச்சான்று பெற்ற மருத்துவமனை
  3. சிறப்பு (ம) தீவிர மகப்பேறு சிகிச்சை மையம்
  4. பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு
  5. இரத்த சேமிப்பு வங்கி
3 அரசு மருத்துவமனை, பாலக்கோடு 56
  1. வட்ட மருத்துவமனை
  2. பச்சிளங் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு
  3. இரத்த சேமிப்பு வங்கி
4 அரசு மருத்துவமனை, பாப்பிரெட்டிபட்டி 30 1.வட்ட மருத்துவமனை
5 அரசு தொழுநோய் மருத்துவமனை 40 1.தொழுநோய் மருத்துவமனை
அரசுமருத்துவமனைகளின்செயல்திறன்(ஏப்ரல்2016 – மார்ச்2017வரை)
வ.எண். விவரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை,பென்னாகரம் அரசு மருத்துவமனை,அரூர் அரசு மருத்துவமனை,பாலக்கோடு அரசு மருத்துவனை,பாப்பிரெட்டிபட்டி
1 படுக்கை எண்ணிக்கை 116 65 56 30
2 ஒதுக்கீடு செய்யப்பட்ட மருத்துவர்களின் எண்ணிக்கை 17 19 13 8
3 தற்போது பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை 15 18 12 7
4 வெளி நோயாளிகள் 441432 274064 309394 182393
5 சராசரி வெளி நோயாளிகள் (நாளொன்றுக்கு) 1209 750 849 497
6 உள்நோயாளிகள் 7306 6459 6330 3416
7 படுக்கைகளில் தங்கும் விகிதம் 81% 98% 100.38% 83.3%
8 பிரசவங்கள் 471 855 123 33
9 சுக பிரசவங்கள் 292 486 67 33
10 ஆயத்த பிரசவங்கள் 4 14 0
11 அறுவை சிகிச்சை பிரசவங்கள் 173 355 56
12 இரவு அறுவை சிகிச்சை பிரசவங்கள் 3 42 2
13 குடும்ப நல அறுவை சிகிச்சைகள் 209 335 424 6
14 பெரிய அறுவை சிகிச்சைகள் 845 1525 544 4
15 சிறிய அறுவை சிகிச்சைகள் 4969 4784 3972 3796

மருத்துவமனைகளில்வழங்கப்படும்சேவைகள் :

  1. 24 மணி நேர அவசர மற்றும் விபத்து சிகிச்சை
  2. 24 மணி நேர பிரசவ வசதி
  3. பொது மற்றும் சிறப்பு மருத்துவ வசதி
  4. குடும்பநலம் தொடர்பான வசதிகள்
  5. தொற்று மற்றும் தொற்றா நோய் சிகிச்சைகளுக்கான வசதி
  6. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட வசதி
  7. 108 ஆம்புலன்ஸ் வசதி
  8. இலவச அமரர் ஊர்தி சேவை
  9. மாவட்ட மனநல திட்டம்
  10. திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டுத் திட்டம்
  11. சிறப்பு (ம) தீவிர மகப்பேறு சிகிச்சை மையம்
  12. தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம்
  13. ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தை பிறந்தவுடன் கிராமபுறங்களில் ரூ.700/-ம், நகர்புறங்களில் ரூ.600/-ம் வழங்கப்படுகிறது.
  14. ஜனனி சிசு சுரக்ஷா கார்யகிராம் திட்டத்தின்கீழ் குடும்பநல அறுவை சிகிச்சை செய்யும் கர்ப்பிணி தாய்மார்களுக்கும், பிறந்த குழந்தைகளுக்கும் ஏற்படும் பிரச்சனைகள் தீர்த்து வைக்கவும், உற்று நோக்கவும் வசதி உள்ளது.
  15. அம்மா இலவச பரிசு பெட்டகம்
  16. எக்ஸ்ரே வசதி
  17. கர்பிணி பெண்களுக்கான ஸ்கேன் வசதி
  18. அம்மா ஆரோக்கிய திட்டம்
  19. டயாலசிஸ் மையம்.

சமீபத்தியசெயல்பாடுகள் :

  1. பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு புதியதாக வெளிநோயாளிகள் பிரிவு மற்றும் இரத்த வங்கி கட்டிடம் கட்டுவதற்கு ரூ.90 லட்சத்திற்கான நிதி ஒதுக்கீடு மாண்புமிகு முதல்வர் அவர்களால் வீடியோ கலந்துரையாடல் மூலம் துவக்கப்பட்டது.
  2. பெண் சிசுக்கொலை மற்றும் கருக்கொலை தடுத்தல் சட்டம் 1994-ன்படி 05.2017 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கூடுதல் கட்டிடத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சென்னை, இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலக இணை இயக்குநர் மரு.எஸ்.குருநாதன், எம்.எஸ். மற்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிபதிகள், விரைவு நீதிமன்ற நீதிபதிகள், குடும்பநலம் தொடர்பான நீதிபதிகள் மற்றும் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் கலந்துகொண்டு பெண் சிசுக் கருக்கலைப்பு தொடர்பான அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டது மற்றும் ஸ்கேன் மருத்துவர்களின் சந்தேகங்கள் தீர்த்துவைக்கப்பட்டது.
  3. அம்மா ஆரோக்கிய திட்டம் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் அரூர் மற்றும் பாலக்கோடு ஆகிய மூன்று மருத்துவமனைகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  4. பென்னாகரம் மருத்துவமனையில் டயாலசிஸ் மையம் 06.2017 அன்று துவக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

எதிர்காலநடவடிக்கைகள் :

  1. இந்திய பொது சுகாதாரத் தரங்களின் வழிகாட்டுதல் மற்றும் கோட்பாடுகளின்படி நான்கு அரசு மருத்துவமனைகளின் படுக்கை வசதியினை அதிகப்படுத்துவது.
  2. மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியில் புதிய கட்டிடம் கட்டுதல். பாலக்கோடு அரசு மருத்துவமனையில் புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் பிரிவிற்கான கட்டிடம் கட்டுதல் (ரூ.2.14 கோடி). அரூர் சிறப்பு பச்சிளங்குழந்தைகள் பிரிவு (ரூ.90.2 லட்சம்).
  3. இணை இயக்குநர் அலுவலகம் 2 கோடி ரூபாய் மதிப்பில், மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில் கட்ட அரசாணை பெறப்பட்டு பணி துவங்கப்பட உள்ளது.
  4. டயாலசிஸ் மையங்களை பாலக்கோடு மற்றும் அரூர் அரசு மருத்துவமனைகளில் அமைத்தல்.
  5. அரூர் மற்றும் பென்னாகரம் அரசு மருத்துவமனைகளிலும் அதிநவீன தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் கட்டுதல்.
  6. நல்லம்பள்ளி மற்றும் காரிமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார மையங்களை அரசு தாலுக்கா மருத்துவமனைகளாக தரம் உயர்த்துதல்.
  7. அரூர் அரசு மருத்துவமனையில் 40 லட்சம் மதிப்புள்ள பிரசவ முன் கவனிப்பு, பின் கவனிப்பு வார்டு கட்டப்பட்டு வருகிறது.
  8. பாலக்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட மாண்புமிகு முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.