மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” என்ற சிறப்பான திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் அரசு நலத்திட்டங்களின் செயல்பாடுகள், நடைபெற்று வரும் திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்