மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்
கல்வியின் சிறப்பு பணி குறுகலான தொடக்க கல்வி இடைநிலை கல்வி மேல்நிலை வயதுவந்தோர் மற்றும் முறைசாரா கல்வி துறைக்கு தேவையான ஆதாரங்களை வழங்கி தொடர்ச்சியான தர முன்னேற்றத்தை கொடுப்பது.
குறிக்கோள்கள்:
- தொடக்க உயர்நிலை மேல்நிலை வயதுவந்தோர் மற்றும் முறைசாரா கல்வி துறையின் தரம் மேம்பாட்டிற்கான ஆதரவினை வழங்குதல்
- SCERT, DIET, BRC,CRC இடையேயான தொடர்பினை வலுவூட்டுதல்
- மாவட்ட அளவில் வட்டார வள மையம் மற்றும், குறுவள மையத்துடன் இணைந்து கல்விக்கு தேவையான வளங்களை வழங்குதல்
- தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் தலைமை பண்பு பயிற்சியினை திட்டமிடுதல் மற்றும் செயலாற்றுதல்
- மாவட்ட அளவில் கல்வித் திட்டங்களை உருவாக்கி கற்பித்தல் மற்றும் பள்ளியின் தரத்தை கண்காணித்தல்
- பள்ளிகளுக்கு தேவையான கற்றல் கற்பித்தல் பொருட்களை மற்றும் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்
- கற்போரின் மேம்படுத்த கலைத்திட்ட வடிவமைப்பு மற்றும் மதிப்பீட்டு கருவிகளை உருவாக்கி கொடுத்தல்
- மாவட்ட அளவில் கல்வியில் ஆய்வுகளை மேற்கொள்ளுதல்
வரலாறு :
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கு ஒன்று விதம் 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் நிறுவனமானது அரசாணை எண்MS.NO.145,தேதி 27.06.2007 முதல் தமிழ்நாடு அரசினால் நிறுவப்பட்டு புலிக்கரை, அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 03.09. 2007 முதல் 27.05.2020 வரை இயங்கி வருகிறது. மேலும் 28.05.2020 முதல் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செட்டிகரை கிராமத்தில் இந்நிறுவன வளாகம் இயங்கிக் கொண்டுள்ளது.
தேசிய மற்றும் மாநில நிறுவனங்களான NCERT, NIEPA,SCERT நிறுவனங்கள் தொடக்க நிலை வயதுவந்தோர் கல்விக்கு போதுமான அளவிற்கு ஆதரவு அளித்துள்ளனர். இவ்வகையில் வயது வந்தோர் கல்வித் துறைக்கு தேசிய அளவில் மத்திய கல்வி இயக்குனரகம் மாநில அளவில் மாநில வள மையங்கள் ஆதரவு அளிக்கின்றனர். தொடக்க கல்வி ஆசிரியர் நிறுவனமானது மாநில கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன ஆனால் இவற்றின் செயல்பாடுகள் பெரும்பாலும் ஆசிரியரின் பணி முன் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது.
தேசிய கல்வி கொள்கை 1986 இல் ஆசிரியர் கல்வியில் மறுகட்டமைப்பு மற்றும் மறுசீரமைப்பு திட்டத்தை 1987 அக்டோபரில் அங்கீகரிக்கப்பட்டது. இத்திட்டத்தில் 5 உட் கூறுகளில் ஒன்று மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை நிறுவப் படுதல். இதனடிப்படையில் அக்டோபர் 1987 இல் DIETபற்றிய கூறுகளை செயல்படுத்துவதற்கான வரைவு வழிகாட்டுதல்களை மாநிலங்களுக்கு சுற்றறிக்கை பரப்பப்பட்டன. மேலும் அடுத்தடுத்த சுற்றறிக்கைகள் சேர்த்து நடைமுறைப்படுத்துவதற்கான அறிக்கையை உருவாக்கியது. இதனை தொடர்ந்து அக்டோபர் 1989ஆம் ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும்216.DIETஅமைப்பதற்கான திட்டத்தை அனுமதித்தது.
தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன இந் நிறுவனமானது நான்கு கட்டங்களாக நிறுவப்பட்டுள்ளன. இதில் தர்மபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி, நிறுவனமானது நான்காவது கட்டத்தில் 2007ஆம் வருடம் நிறுவப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில், புலிக்கரை கிராமத்தில் இந்நிறுவனம் இயங்கியது. ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஏழு துறைகளுடன் செயல்படுகின்றன. அவற்றின் செயல்பாடுகளைப் பற்றி பார்ப்போம்.
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்- தர்மபுரி
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமானது தொடக்க நிலை கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆசிரியர் கல்வி தொடர்பான செயல்பாடுகளை வழங்கி வருகிறது. இந் நிறுவனமானது 2007 ஆம் ஆண்டு மனிதவள மேம்பாட்டு துறையால் ஏற்படுத்தப்பட்டு, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின் மூலம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இப்பயிற்சி நிறுவனமானது அனைத்து வசதிகளுடன் கூடிய EDUSAT, ஸ்மார்ட் வகுப்புகள், மெய்நிகர் வகுப்பறைகள் வசதியுடன் வழங்கப்பட்டு மாவட்டத்திலுள்ள ஆசிரிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந் நிறுவனமானது கல்வி அமைப்புகளான RMSA, SSA,அங்கன்வாடி மற்றும் பால்வாடி ஆதரித்து வருகிறது. மேலும் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்திற்கு ஆதரவு அளித்து வருகின்றது.
சிறப்பு இலக்கு குழுக்கள் :
தேசிய கல்வி முறையானது ஒரு குறிப்பிட்ட நிலை வரை, சாதி, மதம், இருப்பிடம் அல்லது பாலினம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், அனைத்து மாணவர்களுக்கும் ஒப்பிடும் படியான தரமான கல்வியை வழங்க வேண்டும் என்று தேசிய கல்வி கொள்கை குறிப்பிடுகிறது. இதனை தொடர்ந்து சமத்துவத்தை ஊக்குவிக்க, அணுகுவதில் மட்டுமல்லாமல் வெற்றி பெறவும் அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்கின்றது. மேலும் இந் நிறுவனமானது கீழே உள்ள குழுக்களின் கல்வியை மேம்படுத்துவதிலும் முதன்மை கவனம் கொடுக்க வேண்டும் என்கின்றது.
- பெண்கள்
- பட்டியல் இனத்தவர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்
- சிறுபான்மையினர்
- மாற்றுத்திறனாளிகள்
- கல்வியில் பின்தங்கிய குழுக்கள் உதாரணமாக வேலை செய்யும் குழந்தைகள், குடிசை வாசிகள், மலைவாழ் மக்கள், மற்ற அணுக முடியாத பகுதிகளில் உள்ளவர்கள்.
வளாகம் மற்றும் உட்கட்டமைப்பு :
- வழங்கப்பட்டுள்ள நிலப்பரப்பு 16713.52 சதுர மீட்டர்
- வழங்கப்பட்டுள்ள நிலமானது இன் நிறுவனத்திற்கு உரியது
- 3315.09 சதுர மீட்டர் அளவிற்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது
துறைகள் :
- பணி முன் பயிற்சித்துறை
- பணியிடைப் பயிற்சி துறை
- மாவட்ட கருவூல அழகு
- திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை துறை
- கல்வி நுட்பவியல் துறை
- பணி அனுபவ துறை
- பணி அனுபவ துறை
1.பணி முன் பயிற்சித்துறை :
- தொடக்கக் கல்விக்கு தரமான பணி முன் பயிற்சியை ஒருங்கமைத்து கொடுக்கிறது
- ஆசிரிய பயிற்சி மாணவர்களுக்கு குழந்தை மைய அணுகுமுறையை வழங்குதல்
- ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குதல்
- அறிவியல் ஆய்வகம், உளவியல் ஆய்வகம், பணி அனுபவ பொருட்கள், கலை அறிவியல் சார்ந்த கல்வி பொருட்கள், உடற்கல்வி பொருட்கள் மற்றும் தோட்ட பராமரிப்பு போன்ற ஆய்வகங்கள், பொருட்களை பராமரித்தல்
- ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு கற்பித்தல் பயிற்சிக்கு வழிவகை செய்தல்
- ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பாடத்திட்டம் சார்ந்த பல பயணங்களை ஏற்பாடு செய்தல்
- யோகா, உடற்பயிற்சி மற்றும் சுகாதார கல்வி வழங்குதல்
- பாட இணை செயல்பாடுகள் விவாதம், பேச்சுப்போட்டி, கருத்தரங்கு, வினாடி வினா, கட்டுரை எழுதுதல், நடனம், இசை, பாடல்கள் போன்ற போட்டிகளை நடத்துதல்
2.பணியிடை பயிற்சி துறை :
- மாவட்டம் முழுவதும் கல்வி திட்டங்களை திட்டமிடுதல் மற்றும் ஒருங்கிணைப்பதில் கல்வி அதிகாரிகளுக்கு உதவுதல்
- மாவட்டத்திலுள்ளதொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை கண்டறிதல்
- மாவட்டத்திற்கு உள்ளும் வெளியும் பணியிடை பயிற்சிகளை நடத்துதல்
- தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சிகளை நடத்தும் சிறப்பு நிறுவனமாக செயல்படுதல்
- பணியிடைப் பயிற்சி நடத்தும் கருத்தாளர்களுக்கு வழிநடத்தும் பயிற்சிகள் வழங்குதல்
- ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சிகளை நேரிலும் தொலைதூர முறையிலும் நடத்துதல்
- பணியிடை பயிற்சிகளின் தரம் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை மேற்பார்வை மற்றும் மதிப்பீடு செய்து முன்னேற்றத்திற்கு உதவுதல்
- மேலும் கற்க விரும்பும் ஆசிரியர்களுக்கு இந்நிறுவனம் ஒரு வள மையமாக செயல்படுகிறது
- செயல் ஆராய்ச்சி மற்றும் கால அளவிலான இடைவினை செயல்பாடுகளுக்கான சிறப்பு நிறுவனமாக செயல்படுகிறது
- பள்ளி அளவிலான செயல் ஆராய்ச்சிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் பரவலாக்குதல் ஆகியவற்றை செய்தல்
- செய்திமடல்கள் மற்றும் மாத இதழ்கள் போன்றவற்றை பிரசுரிக்க உதவுதல்
3.மாவட்ட வள மையம் :
- கல்வி அதிகாரிகளுக்கு திட்டமிடுதல் மற்றும் பயிற்சிகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளில் முறைசாரா கல்வி மற்றும் வயதுவந்தோர் கல்வி பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு உதவுதல்
- முறைசாரா கல்வி மற்றும் வயதுவந்தோர் கல்வி பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு உள் நுழை மற்றும் தொடர்கல்வி போன்றவற்றை அமைக்க உதவும் சிறப்பு நிறுவனமாக செயல்படுதல்
- நேரு யுவகேந்திரா முறைசாரா கல்வி வயதுவந்தோர் கல்வி மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் கருத்தாளர் களுக்கு வழிகாட்டுதல் பயிற்சிகளை நடத்துதல்
- முக்கிய பாடங்கள் மற்றும் தனித்தனி பாடங்களுக்கு தேவையான கற்பித்தல் நுணுக்கங்களை வழங்குதல்
- முறைசாரா கல்வி வயதுவந்தோர் கல்வி பணியாளர்களுக்கான பயிற்சிகளின் தரம் மற்றும் பயன்பாடுகளை மேற்பார்வை செய்து மதிப்பிடுதல்
- முறைசாரா கல்வி வயதுவந்தோர் கல்வி பணியாளர் தொடர்பான தரவுகளை பராமரித்தல்
- முறைசாரா கல்வி வயதுவந்தோர் கல்விக்கான பாடத்திட்டங்கள் தயாரித்தல் கற்றல் கற்பித்தல் உபகரணங்களை தயாரித்தல், குறைந்த செலவிலான கற்றல் கற்பித்தல் கருவிகளை தயாரித்தல், மதிப்பீட்டு கருவிகளை தயாரித்தல் போன்ற பணிகளை செய்தல்
- முறைசாரா கல்வி மற்றும் வயதுவந்தோர் கல்வி தொடர்பான களப்பணியில் இடைவினை ஆற்றுதல் குறைகளை களைதல் போன்ற பணிகளை செய்தல்
- முறைசாரா கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு திட்டம் தொடர்பான கருத்துகளை ஊடகங்கள் மூலமாக தெரியப்படுத்துவதற்கு உதவுதல்
- அனைத்து களங்களிலும் செயல் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்
4.கலைத்திட்டம் தயாரித்தல் மற்றும் மதிப்பிடுதல் :
- நடைமுறையிலுள்ள கலைத்திட்டத்தை அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப பாடவாரியாக உருவாக்குதல்
- அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற கலை திட்டத்திற்கு இணங்க கற்றல் கற்பித்தல் கருவிகளை தயாரித்தல்
- தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்வதற்கு ஏற்ற புதுமையானவழிமுறைகள் மற்றும் நுணுக்கங்களை தயாரித்தல்
- தேர்ச்சி கண்டறிதல் சோதனை குறைதீர் கற்பித்தல் மித்திரன் உள்ள மாணவர்களுக்கு ஏற்ற மதிப்பீட்டு கருவிகளை தயாரித்தல்
- முதியோர் கல்வி மற்றும் முறைசாரா கல்வி வளர்ச்சிக்கு மாவட்ட வளமையத்திற்கு உதவுதல்
- தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் உள்ள தொடக்க நடுநிலை மற்றும் வயது வந்தோர் மாணவர்களுக்கு சோதனைகள் நடத்துதல்
- கற்போரை மதிப்பிட தகுதியான மற்றும் நம்பகத்தன்மையுள்ள திட்டத்தினை தயாரித்து கல்வி அதிகாரிகளுக்கு வழங்குதல்
- கலைத்திட்டம் தயாரித்தல் மற்றும் மதிப்பிடுதல் துறையின் வளர்ச்சிக்கு தேவையான பணி மனைகளை நடத்துதல்
- பணிமுன் பயிற்சி மற்றும் பணியிடைப் பயிற்சி துறைகளுக்கு தேவையான திட்டம் தயாரித்தல் மற்றும் மதிப்பிடுதல் தொடர்பான கருத்துக்களை வழங்குதல்
5.பிற செயல்பாடுகள் :
- மேற்சொன்ன செயல்பாடுகளுடன் சேர்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள பணிகளையும் கலைத்திட்டம் தயாரித்தல் மற்றும் மதிப்பிடுதல் துறை மேற்கொள்கிறது
- தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்களின் சேர்க்கை விண்ணப்பங்களை சரிபார்த்து இணையத்தில் பதிவிடுதல்
- தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவர்களின் அகமதிப்பீடு மதிப்பெண் விவரங்களை இணையத்தின் பதிவிடுதல்
- ஆசிரியர்கள் திறமையான கற்பித்தல் முறைகளை மேற்கொள்ளவும் சிறப்பாக செயலாற்றவும் பள்ளிகளுக்கு சென்று பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான உதவிகளை பள்ளிகளிலேயே வழங்குதல்
- ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பள்ளிகளில் கற்பித்தல் பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது அவர்களை பார்வையிட்டு முன்னேற்றத்திற்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குதல்
- இந்திய கல்விமுறை மற்றும் சுய வளர்ச்சி பணிமனை போன்றவை தொடர்பான பாடங்களும் ஆசிரிய பயிற்சி மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது
- சமுதாய வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள சமுதாயத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு மாணவர்கள் சென்று பார்வையிட ஏற்பாடு செய்தல்
- பணி அனுபவ துறையின் மூலமாக மாணவர்களுக்கு பணிமனைகள் அமைத்தல், தோட்டவேலை செய்தல் போன்றவற்றை செய்ய உதவுதல்
- வேலை தொடர்பான பொழுதுபோக்கு செயல்பாடுகளை ஆசிரிய பயிற்சி மாணவர்களிடையே ஊக்குவித்தல்
6.திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை :
- மாவட்ட அளவிலான தரவுகளை பராமரித்தல்
- கல்வி திட்டமிடுதல் பணியில் உள்ள அலுவலர்கள் அனைவருக்கும் ஆரம்பக்கல்வி மற்றும் தேசிய கல்வி இயக்கம் சார்ந்த அலுவலர்களுக்கு தேவையான திட்டம் சார்ந்த அறிவுரைகளை வழங்குவதற்கு தேவையான ஆராய்ச்சிகள் நடத்துதல்
- மாநிலத்தில் செயல்படுத்தப்படும் இடைவினை செயல்பாடுகளின் தாக்கத்தினை கண்டறிதல்
- குழந்தைகள் மற்றும் வயது வந்த கற்போர் தொடர்பான சேர்க்கை தக்க வைத்தல் தொடர்ந்து பள்ளிக்கு வருதல் தொடர்பான ஆய்வினை நடத்துதல்
- கல்வி நிறுவனங்களை மதிப்பிடுவதற்கு தேவையான அடிப்படைக் கருத்துகள் வழிமுறைகள் மற்றும் நுட்பங்களை உருவாக்குதல்
- பள்ளிகள் வரைபடம் நுண்திட்டம் குழு பள்ளிகள், நிறுவன திட்டமிடுதல் மற்றும் மதிப்பிடுதல் போன்ற பணிகளில் கல்வி அதிகாரிகளுக்கு தேவையான தொழில் நுட்ப வசதிகளை வழங்குதல்
- தன்னார்வ கல்வி பணியாளர்கள், இளைஞர்கள், போன்றவர்களுக்கு சமூக பணிகளில் ஈடுபடுவதற்கு தேவையான வழிநடத்துதல் பயிற்சி போன்றவற்றை வழங்கும் சிறப்பு நிறுவனமாக செயல்படுதல்
- திட்டமிடுதல் மற்றும் மேலாண்மை தொடர்பான பயிற்சிகளை தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு வழங்குதல்
- மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் கல்வி வளர்ச்சி திட்டங்களின் பயன்பாடுகளை மதிப்பீடு செய்தல்
- மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் ஆண்டு திட்டமிடுதல் மற்றும் சுய மதிப்பீட்டு அறிக்கையினை தயார் செய்து வழங்குதல்
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,
செட்டிகரை, தர்மபுரி
தமிழ்நாடு – 636704
அலைபேசி எண் : +91 73730 03385
மின்னஞ்சல் – dietdpi@nic.com, dietdharmapuri@gmail.com