மூடு

மாவட்ட ஆட்சியரின் சுருக்க குறிப்பு

திருமதி. S.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப

Collector Profile Picture  திருமதி. S.திவ்யதர்ஷினி, இ.ஆ.ப மாவட்ட ஆட்சித் தலைவர், தர்மபுரி,. இவர் 2010-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சிப்பணித்தேர்வில் அனைத்திந்திய அளவில் முதலிடம் பெற்றவர் ஆவார். இவர் இந்திய ஆட்சிப்பணி அமைப்பின் 2011 – ஆம் வருடத்திய தொகுதியில் உள்ளவர் ஆவார். மேலும் இவர் இளங்கலை சட்டப்படிப்பு மற்றும் பொது நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். இவர் பணிக்கு வந்தபின் 2012-13-ஆம் ஆண்டில் கோயம்பத்தூர் உதவி ஆட்சியராகவும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை கோட்டத்தில் சார் ஆட்சியராக 2013-15 வரை பணிபுரிந்துள்ளார். 2016-ஆம் ஆண்டில் தமிழக அரசு உள்துறை துணை செயலராகவும், 2017-ஆம் ஆண்டில் தமிழக அரசின் பொதுத்துறையின் செயலராகவும் பணிபுரிந்துள்ளார். இவர் சென்னை பெருநகர நிர்வாகத்தில் வட்டார துணை ஆணையராக(வடக்கு) பணிபுரிந்துள்ளார். இராணிப்பேட்டை மாவட்டத்தின் முதல் ஆட்சித்தலைவராக பணிபுரிந்துள்ளார். சென்னை பெருநகர நிர்வாகத்தில் வட்டார இணை ஆணையராக(சுகாதாரம்) பணிபுரிந்துள்ளார. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக பணிபுரிந்துள்ளார். தர்மபுரி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றுள்ளார்.