மூடு

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்

இந்தியாவில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. மேலும், 1987ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கைப்படி, அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர் உள்ள பகுதியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்.

இதன் அடிப்படையில், அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்ட தருமபுரி மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் 28.11.1995ல் பதிவு பெற்ற சங்கமாக தொடங்கப்பட்டது. இத்திட்டம் மத்திய அரசின் 100 % நிதி உதவியுடன் மாநில தொழிலாளர் துறையின் மேற்பார்வையில் மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு செயல்படுகிறது.

குறிக்கோள்கள் :

  1. அனைத்து விதமான குழந்தைத் தொழிலாளர் முறைகளை ஒழிப்பது.
  2. அபாயகரமன தொழில் / பணிகளில் உள்ள வளரிளம் தொழிலாளர்களை மீட்க பங்களித்தல் மற்றும் அவர்களை திறன்மேம்பாடு பயிற்சியில் இணைத்தல்.
  3. விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  4. குழந்தைத் தொழிலாளர்களை கண்காணித்தல், கண்டறிதல் மற்றும் தகவல் அளித்தல் முறைகளை உருவாக்குதல்.

பயனாளிகள் :

  1. 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைத் தொழிலாளர்கள்.
  2. அபாயகரமான பணிகளில் உள்ள 15-18 வயதுக்குட்பட்ட வளரிளம் தொழிலாளர்கள்.
  3. குழந்தைத் தொழிலாளர்களின் குடும்பங்கள்.

திட்டத்தின் சேவைகள் :

  • மதிய உணவு மருத்துவ பரிசோதனை
  • பேருந்து வசதி
  • விடுதி வசதி
  • மாதஊக்கத்தொகை ரூ : 400/-

தற்போது, இம்மாவட்டத்தில் 22 சிறப்புப் பயிற்சி மையங்களில் 441 மீட்கப்பட்ட சிறார்கள் பயின்று வருகின்றனர்.  9-14 வயதுக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களுக்கு இம்மையத்தில் காலை 9.30 முதல் மாலை 4.00 வரை 6-24 மாதங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்பு இவர்கள் முறைசார் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். இப்பயிற்சி மையங்களில் கட்டணம் இல்லாமல் கீழ்காணும் சேவைகள் வழங்கப்படுகிறது.

  • வயதுக்கேற்ற சிறப்புக் கல்வி
  • தொழிற்கல்வி
  • பாடபுத்தகங்கள்
  • கல்வி உபகரணங்கள்
  • சீருடை, புத்தகப்பை, காலணி
  • சிறப்புப் பயிற்சிக்கு பின் வயதுக்கேற்ற வகுப்பில் பொதுப்பள்ளியில் சேர்க்கை.
  • உயர்கல்வி பயில வருடத்திற்கு ரூ. 6000/- ஊக்கத்தொகை.
  • தொழில் முனைவோருக்கான திறன் மேம்பாடு பயிற்சி, வழிகாட்டுதல்.
  • குழந்தைத் தொழிலாளர் குடும்பங்களை மேம்பாட்டு திட்டத்தில் இணைத்தல்.

திட்டத்தின் வெற்றிகள் :

  • இத்திட்டத்தின் மூலம் இதுவரை 11767 மாணவர்கள் பொதுப்பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • இத்திட்ட முன்னாள் மாணவர்கள் 129 நபர்கள் தற்போது MBBS, B.Tech, B.E, M.Sc., B.Ed., PG / UG course, D.T.Ed., ITI and Diploma போன்ற உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
  • 2010-11ம் ஆண்டில் இத்திட்ட முன்னாள் மாணவர் எம்.மூர்த்தி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1123/1200 மதிப்பெண்களும், 2014-15ம் ஆண்டில் வி.கார்த்திக் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1156/1200 மதிப்பெண்களும் பெற்று இருவரும் மருத்துவம் ( MBBS ) பயின்று வருகின்றனர். 2015-16ம் ஆண்டில் பி.சிவா 1148/1200 மதிப்பெண்களும், 2016-17ம் ஆண்டில் சி.மோகன்ராஜ் 1157/1200 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

விருதுகள் :

  • தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2002, 2009, 2010 மற்றும் 2012ம் ஆண்டில் சிறந்த மாவட்ட ஆட்சியர் விருது பெறப்பட்டுள்ளது.
  • தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 2009 மற்றும் 2016ம் ஆண்டில் சிறந்த திட்ட இயக்குநர் விருதும், 2010, 2012, 2013 மற்றும் 2016ம் ஆண்டில் சிறந்த கள அலுவலர்களுக்கான விருதும் பெறப்பட்டுள்ளது.

குழந்தைத் தொழிலாளர் குறித்து தகவல் அளிப்பதற்கான இலவச சேவைகள்

இணையதளம்- pencil.gov.in

குழந்தைகள் மீட்புக் குழு – 1098.

திட்ட அலுவலகம் : 2-ம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், ஆட்சியரக வளாகம், தருமபுரி-636705

தொலைபேசி : 04342-232685
மின்னஞ்சல் : poicppdpi@gmail.com

Project Details

  • இணையதளம்: http://www.pencil.gov.in
  • மின்னஞ்சல் : poicppdpi[at]gmail[dot]com
  • முகவரி: திட்ட அலுவலகம் : 2-ம் தளம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கட்டடம், ஆட்சியரக வளாகம், தருமபுரி-636705
  • தொடர்பு எண்: 04342-232685
  • தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: Mr. N. Saravanan , Project Director - 94436 33383