மின் ஆளுமை திட்டம்
மின்-மாவட்டம் என்பது தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் மாநில பணிமுறை திட்டமாகும். பொது சேவை மையங்களானது அரசு மற்றும் பொதுத்துறை சேவைகளை கிராமபுற மக்களுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட அளவில் மாவட்ட மின் ஆளுமைச் சங்கமானது மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது.
தொடக்கத்தில் 5 வகையான வருவாய்ச் சான்றிதழ்கள் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2014-ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் 01-12-2015-ல் இருந்து இணையவழி உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அல்லாத பட்டா மாற்ற சேவைகளும், 01-03-2015-ல் இருந்து சமூக நலத்துறையின் 5 வகையான திருமண நிதி உதவித் திட்டங்கள் மற்றும் 2 வகைப் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நிதி உதவித் திட்டங்களும், 01-03-2018-ல் இருந்து கூடுதலாக மேலும் 15 வகையான வருவாய்ச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான மூவகை வருவாய்த் துறைச் சான்றிதழ்கள் 2015-16 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக 15 அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் மூலம் சான்றிதழ்கள் விண்ணப்பிக்கப்படுகிறது.
தற்போது பொது சேவை மையங்கள் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நடைமுறை :
விரைவான சேவை, குறைந்த செலவு , வெளிப்படைத் தன்மை, குடிமக்கள் பங்களிப்பு, பாதுகாப்பு ஆகியவை மின் ஆளுமை திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.
பொது மக்கள் தங்கள் கிராம ஊராட்சியில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி குறைந்த செலவில் சேவையை பெறலாம்.
குறுஞ்செய்தியானது சேவையை விண்ணப்பிக்கும் போதும், அதிகாரியால் சேவை வழங்கப்படும் போதும் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். சேவைக் கட்டணம், சேவையின் விவரம் மற்றும் புகார் எண் ஆகியவை குறுஞ்செய்தியில் இடம்பெறும். கூடுதல் கட்டணம் வாங்கினாலோ அல்லது புகார் ஏதேனும் இருப்பின் கட்டணமில்லா புகார் எண் (1800 425 1333) மூலம் மின் ஆளுமை உதவி மையத்தில் தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தின் நிலை 155250 என்ற எண்ணிற்கு பதிவு செய்த கைப்பேசி எண்ணிலிருந்து விண்ணப்ப எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பி தெரிந்துக்கொள்ளலாம்.
சான்றிதழ்கள் விண்ணப்பதாரரின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கே” Tiny URL”” மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
பொது சேவை மையங்கள் :
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், கிராம தொழில் முனைவோர்கள், அரசு கேபிள் டிவி ஆகிய சேவை மைய முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சேவை மையங்களை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் 402 பொது சேவை மையங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 251 கிராம ஊராட்சிகளில் பொது சேவை மையங்களானது 227 கிராம ஊராட்சிகளில் நிறுவபட்டுவிட்டது.
வரிசை எண் | வருவாய்த்துறை | சேவை கட்டணம் |
---|---|---|
1 | முதல் பட்டதாரி சான்றிதழ் | ரூ.60 |
2 | கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் | ரூ.60 |
3 | வருமானச் சான்றிதழ் | ரூ.60 |
4 | பிறப்பிடச் சான்றிதழ் | ரூ.60 |
5 | சாதிச் சான்றிதழ் | ரூ.60 |
6 | இருப்பிடச் சான்றிதழ் | ரூ.60 |
7 | விவசாய வருமானச் சான்றிதழ் | ரூ.60 |
8 | குடிபெயர்வுச் சான்றிதழ் | ரூ.60 |
9 | வேலையில்லாதவர் என்பதர்கானச் சான்றிதழ் | ரூ.60 |
10 | விதவைச் சான்றிதழ் | ரூ.60 |
11 | இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் | ரூ.60 |
12 | கலப்பு திருமணச் சான்றிதழ் | ரூ.60 |
13 | வாரிசுச் சான்றிதழ் | ரூ.60 |
14 | இதர பிற்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ் | ரூ.60 |
15 | சிறு / குறு விவசாயி சான்றிதழ் | ரூ.60 |
16 | சொத்து மதிப்பு சான்றிதழ் | ரூ.60 |
17 | ஆண் குழந்தை இல்லை என்பதர்கானச் சான்றிதழ் | ரூ.60 |
18 | திருமணம் ஆகாதவர் என்பதர்கானச் சான்றிதழ் | ரூ.60 |
19 | அடகு வணிகர் உரிமம் | ரூ.60 |
20 | கடன் கொடுப்போர் உரிமம் | ரூ.60 |
21 | இணைய வழி பட்டா மாற்றம் ( உட்பிரிவு, உட்பிரிவு அல்லாதது, கூட்டு பட்டா ) | ரூ.60 |
வரிசை எண் | சமூக நலத்துறை | சேவை கட்டணம் |
---|---|---|
1 | தர்மாம்பால் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித்திட்டம் ரூ.120 | ரூ.120 |
2 | அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித்திட்டம் | ரூ.120 |
3 | மூவாலூர் இராமாமிர்தம் நினைவு திருமண நிதி உதவித்திட்டம் | ரூ.120 |
4 | ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதி உதவித்திட்டம் | ரூ.120 |
5 | டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித்திட்டம் | ரூ.120 |
6 | பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் 1 மற்றும் திட்டம் 2 | ரூ.120 |
வரிசை எண் | மின் பகிர்மான கழகம் | சேவை கட்டணம் |
---|---|---|
1 | மின்கட்டணம் செலுத்துதல் |
|
2 | புதிய மின் இணைப்புக்கு பதிவு செய்தல் | ரூ.60 |
வரிசை எண் |
கொதிகலன்கள் இயக்குநரகம் |
சேவை கட்டணம் |
---|---|---|
1 |
கொதிகலன்கள் உரிமம் பதிவு செய்தல் | ரூ.150 |
2 |
கொதிகலன்கள் உரிமம் புதிப்பித்தல் | ரூ.150 |
வரிசை எண் | உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை | சேவை கட்டணம் |
---|---|---|
1 | ஸ்மார்ட் கார்டு அச்சிடுதல் | ரூ.30 |
2 | புதிய குடும்ப அட்டை | ரூ.60 |
3 | குடும்ப அட்டையில் திருத்தம் | ரூ.60 |
வரிசை எண் | தீ மற்றும் மீட்பு இயக்குநரகம் | சேவை கட்டணம் |
---|---|---|
1 | MSB திட்ட அனுமதிக்கான தடையில்லாச்சான்று | ரூ.120 |
2 | MSB க்கான இணக்கச் சான்று | ரூ.120 |
3 | தீ மற்றும் மீட்பு உரிமம் பதிவு மற்றும் புதிப்பித்தல் | ரூ.120 |
4 | Non-MSB திட்ட அனுமதிக்கான தடையில்லாச்சான்று | ரூ.120 |
5 | தீ மற்றும் மீட்பு உரிமம் பதிவு மற்றும் புதிப்பித்தல் | ரூ.120 |
வரிசை எண் | சேவை | சேவை கட்டணம் |
---|---|---|
1 | அண்ணா பல்கலைக் கழக பொறியியல்(BE., B.Tech)கலந்தாய்வுக்கு இணைய வழியில் விண்ணப்பித்தல் | ரூ.60 |
2 | பதிவு குறியீடு அச்சிடுதல் | ரூ.15 |
3 | விண்ணப்பத்தை புதுப்பித்தல் | ரூ.15 |
1 | மின் – மாவட்ட மேலாளர் (ஒன்று) | edm1dpi(dot)tnega(at)tn(dot)gov(dot)in |
2 | மின் – மாவட்ட மேலாளர் (இரண்டு) | edm2dpi(dot)tnega(at)tn(dot)gov(dot)in |
3 | இ-சேவை உதவி மையம் | 1800 425 1333 (இலவச அழைப்பு ) esevai_helpdesk (at) cms (dot) co (dot) in |
பொது சேவை மையங்களின் முக்கிய இணைப்புகள் :
https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – eDistrict CSC Login
https://tnesevai.tn.gov.in/ – eSevai CSC Login
http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild_csc – Girlchild Scheme CSC Login
http://tamilnilam.tn.gov.in/CSC – Tamilnilam CSC Login
https://digitalseva.csc.gov.in/ – Digital Seva CSC Login
http://eservices.tn.gov.in/eservicesnew/home.html – Chitta/Patta View
http://ecview.tnreginet.net/ – EC View
http://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – Urban CSC Login
https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – CSC Reports Login
https://edistricts.tn.gov.in/revenue/status.html – Check Revenue e-Application Status
https://edistricts.tn.gov.in/socialwelfare/status.html – Check Marriage Scheme Application Status
http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild_csc/status.html – Check Girl Child Application Scheme Status
https://uidai.gov.in/ – UIDAI Aadhaar Online Services
http://www.nvsp.in/ – National Voter’s Services Portal
துறை அதிகாரிகளின் முக்கிய இணைப்புகள்:
https://edistricts.tn.gov.in/revenue/login.jsp – eDistrict Officials Login
https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – Officials Reports Login
https://tamilnilam.tn.gov.in/Revenue/ – Tamilnilam Officials Login
https://tnedistrict.tn.gov.in/eda/DepartLogin.xhtml – eSevai Officials Login
https://tnedistrict.tn.gov.in/eda/reportLogin.xhtml – eSevai Officials Report Login
https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – Social Welfare Official Login
http://edistrict.tn.gov.in:8080/socialwelfare_girlchild/login.jsp – Social Welfare Girl Child
https://edistricts.tn.gov.in/revenue/verifyCertificate.html – Check Certificate Genuineness
Project Details
- இணையதளம்: https://tnega.tn.gov.in/
- மின்னஞ்சல் : edm1dpi[dot]tnega[at]tn[dot]gov[dot]in
- முகவரி: மாவட்ட மேலாளர்கள், தரை தளம், முதன்மை கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தர்மபுரி - 636705, தொடர்பு எண் : 8778002527
- தொடர்பு எண்: 8300024064
- தொடர்பு கொள்ள வேண்டிய நபர்: G.சதீசன் / A. பூங்கோதை, மாவட்ட மேலாளர்கள், தர்மபுரி - 636705