மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை
சமூக மற்றும் பொருளாதார ரீதியாக முந்தைய குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க
இறக்குமதி செய்யப்பட்ட அயற்நாட்டு மதுபானங்களை கள்ளத்தனமாகக் கடத்துதல், விற்பனை செய்தல், போலி மற்றும் ஆயத்தீர்வை செலுத்தப்படாத இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்களைக் கள்ளத்தனமாக விற்பனை செய்தல், தெளிந்த சாராவி கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டு சிறைத்தண்டனை பெற்று விடுதலையாகியுள்ளவர்களை மாவட்டவாரியாகக் கண்டறிந்து, அவர்களை மறுபடியும் இக்குற்றத்தில் ஈடுபடாவண்ணம் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக மறுவாழ்வு நிதி வழங்கப்பட்டு வருகிறது.
- ஆடு மற்றும் கறவை மாடுகள் வளர்த்தல், ஊதுவத்தி, கற்பூரம் , உடனடி சாம்பிராணி, மெழுகுவர்த்தி, காகிதக்குவளை, துணி சோப்பு, துணி சோப்புப் பொடி ஆகியவை தயாரித்தல்
| பெயர்/பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி | 
|---|---|---|---|
| மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை | 04342-230168 | acexcise29[at]gmail[dot]com | உதவி ஆணையர்,2-வது மாடி,கலெக்டர் அலுவலகம், தருமபுரி -636705 | 
பயனாளி:
மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான தகுதியான பயனாளிகளை அடையாளம்
பயன்கள்:
உயர்ந்தபட்சமாக நபர் ஒன்றுக்கு ரூ.30,000/-க்கு மிகாமல் மானியமாக வழங்கப்படுகிறது
விண்ணப்பிப்பது எப்படி?
உதவி ஆணையர்,2-வது மாடி,கலெக்டர் அலுவலகம், தருமபுரி -636705
 
                        
                         
                            