மூடு

ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி

வழிகாட்டுதல்
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகு

தர்மபுரியில் இருந்து சுமார் 47 KM தொலைவிலும் , பென்னாகரத்தில் இருந்து 16 KM தொலைவிலும் அமைந்து உள்ளது . ஓகேனக்கல் கடல் மட்டத்தில் இருந்து 1500 அடி உயரத்தில் உள்ளது .ஓகேனக்கல் புகையும் நீர் திவலைகளும் அதன் வெளியை கவர்ந்து இருப்பதால் உருவான பெயர்.

தலைநீர் என்பது இந்த நீர்வீழ்ச்சியைக் குறிக்கும் சங்ககால வழக்கு.  இதனைச் சூழ்ந்திருந்த நாடு தலைநீர் நாடு எனப்பட்டது.  தகடூர் என்னும் தருமபுரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி இதன் சங்ககால அரசன்

ஒகேனக்கலின் பழைய பெயர் உகுநீர்க்கல் என்பதாகும். 1940ஆம் ஆண்டுவாக்கில் கூட தாழ்த்தப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட சேமன் சண்டை என்னும் தெருக்கூத்தில் கட்டியங்காரனாகிய கோமாளி, நான் கங்கையாடப் போரேன். அட, நான் குமரியாடப் போரேன் எனப் பாடும் சாமியாரைப் பார்த்து ஏன் பக்கத்திலிருக்கும் உகுநீர்கல்லுக்குப் போகக்கூடாதா என நகையாடுவான் என்பர். 1969ஆம் ஆண்டு சென்னை தம்பு செட்டி தெருவிலிருந்த புது இலக்கியப் பதிப்பகம் வெளியிட்ட குளிர் காவிரி என்னும் கவிதை நூல் இவ்வருவியை 100 பாடல்களில் வருணிக்கிறது. இதன் ஒன்பதாம் தலைப்பு உகுநீர்க்கல் உயிர்காவிரி எனத் தரப்பட்டுள்ளது.

உகுநீர்க்கல் என்பதே ஒகேனக்கல் எனத்திரிந்து விட்டது. திப்பு சுல்தான் காலம் முடிய வரிவாங்கும் அதிகாரிகள் கன்னடம் பேசுபவர்களாக இருந்த காரணத்தால் தருமபுரி மாவட்டத்து ஊர்ப் பெயர்கள், மலைப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றைக் கன்னடப் பெயர்களாக வருவாய்த்துறைப் பதிவேட்டில் பதிவு செய்தனர். அதை அப்படியே ஆங்கிலேயர் காலத்திலும் பின்பற்றினர். அது இப்போதுவரை தொடர்கிறது. பரிசல் மூலம் சுற்றுலாப் பயணிகளை அருவிகளுக்கு அருகே அழைத்துச்செல்வார்கள். எண்ணெய்க் குளியல் இங்கு பிரபலம்.

புகைப்பட தொகுப்பு

  • ஒகேனக்கல் அருவி -பரிசல்
  • ஒகேனக்கல் - தொங்கும் பாலம்
  • ஒகேனக்கல் முக்கிய அருவி

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னையில் இருந்து ஒகேனக்கலை மிக விரைவான வழியில் சென்றடைவதற்கு 3 மணி 30 நிமிடங்கள் ஆகும். சென்னையிலிருந்து சேலம் வரை விமானம் மூலம் பயணிக்கும் போது, சேலத்தில் இருந்து ஒக்கேனக்கல் செல்ல டாக்சி வசதி உள்ளது.

தொடர்வண்டி வழியாக

-

சாலை வழியாக

சென்னையிலிருந்து ஓகேனக்கலை , அரசு போக்குவரத்து மூலம் 7 மணி நேரத்தில் எளிதாக மற்றும் சிக்கனமாக வந்து அடைய முடியும்.