கால்நடை வளர்ப்பு
மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம்
தருமபுரி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகம் 1981-1982ம் ஆண்டு அரசாணை எண் எம்.எஸ் 2037 வேளாண்மை துறை (டிபிஎபி)யின் கீழ் 03.09.1981 தேதி ஆரம்பிக்கப்பட்டது. சின்னாறு அரசு மீன் பண்ணை மற்றும் ஒகேனக்கல் அரசு மீன்பண்ணை, சின்னாறு, தும்பளஹள்ளி, நாகாவதி, தொப்பையாறு, கேசர்குலிஅல்லா மற்றும் வாணியாறு அலுவலகங்களைக் கொண்டு தருமபுரி மீன்துறை உதவி இயக்குநர் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றது.
நோக்கம் :
நீர்த்தேக்கம் மற்றும் ஆறுகளில் மீன் இருப்பு செய்து பொது மக்களுக்கு தேவையான புரதச்சத்து நிறைந்த மீன் உணவினை, மீன்துறை இயக்குநரால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் மீன் உற்பத்தி செய்வது மீன்வளத்துறையின் திட்டங்களின் நோக்கமாகும்
செயல்பாடுகள்:
- மீன் குஞ்சு விரலிகள் வளர்த்தெடுத்தல்.
- நன்கு வளர்ந்த விரலிகள் நீர்த்தேக்கங்களில் இருப்பு செய்தல்.
- நீர்த்தேக்கங்களில் மீன்வளர்ப்பு மேலாண்மை.
- நீர்த்தேக்கங்களில் உள்ள இருப்பு மற்றும் இயற்கை மீன்களின் – மீன்பிடிப்பு.
- மீன்வள திட்டங்களை செயல்படுத்துதல்
- தமிழ்நாடு மீனவர் நலவாரிய நலத்திட்ட உதவிகள்
ஆறுகள்:
காவிரி ஆறு மாவட்டம் முழுவதும் பாய்கின்றது, 90 கிலோ மீட்டர் நீர் பரப்பளவினை கொண்டுள்ளது. இது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியை உருவாக்கி மேட்டூர் அணையுடன் இணைகிறது. ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி நீரானது ஊட்டமலை முதல் பென்னாகரம் வட்டத்தில் உள்ள நாகமரை மற்றும் தென்பெண்ணை ஆறு காரிமங்கலம் வட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளி அணை வழியாக பாய்ந்தோடுகிறது..
நீர்த்தேக்கங்கள்:
இம்மாவட்டத்தில் உள்ள 6 நீர்த்தேக்கங்கள் 840.38 ஹெக்டர் நீர்பரப்பளவினை கொண்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சின்னாறு, தும்பளஹள்ளி, நாகாவதி, வாணியாறு, தொப்பையாறு, கேசர்குலிஅல்லா போன்ற நீர்த்தேக்கங்களை கொண்டுள்ளது.
- மொத்த மீனவர்கள் எண்ணிக்கை : 3302
- மொத்த மீன் உணவு உற்பத்தி 2863.81 டன் (2016-2017).நாகமரை மற்றும் தென்பெண்ணை ஆறு காரிமங்கலம் வட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளி அணை வழியாக பாய்ந்தோடுகிறது.
- இம்மாவட்டத்தில் உள்ள 6 நீர்த்தேக்கங்கள் 840.38 ஹெக்டர் நீர்பரப்பளவினை கொண்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் சின்னாறு, தும்பளஹள்ளி, நாகாவதி, வாணியாறு, தொப்பையாறு, கேசர்குலிஅல்லா போன்ற நீர்த்தேக்கங்களை கொண்டுள்ளது.
- மொத்த மீனவர்கள் எண்ணிக்கை : 3302.
- மொத்த மீன் உணவு உற்பத்தி 2863.81 டன்
- இம்மாவட்டம் வழியே இரண்டு வற்றாத நதிகள் முறையே காவிரி (35 கி.மீ), தென்பெண்ணை (35 கி.மீ) மற்றும் வற்றக்கூடிய நதிகள் முறையே சனத்குமார் நதி (25 கி.மீ), தொப்பையாறு நதி (20 கி.மீ) பாய்ந்தோடுகிறது
மாவட்டத்தின் நீர்நிலைகள் மற்றும் சங்கங்கள்
- மொத்த நீர்நிலைகள் எண்ணிக்கை 586, சிறிய நீர்நிலைகள் 512, பெரிய நீர்நிலைகள் 74 ஆக மொத்தம் 14000 ஹெக்டர் பரப்பளவினை உள்ளடக்கியது.
- 6 மீனவர் கூட்டுறவு சங்கம் (வண்ண மீன்வளர்ப்பினை மேற்கொள்ளும் மகளிருக்காக ஒரு சங்கமும் உள்ளது
- தருமபுரி மாவட்டம் மீன் விற்பனையாளர் கூட்டுறவு சங்கம்.
- பென்னாகரம் மீனவர் கூட்டுறவு சங்கம்
- பாலக்கோடு பருவதராஜகுல மீனவர் கூட்டுறவு சங்கம்
- மொரப்பூர் மீனவர் கூட்டுறவு சங்கம்
- கம்பைநல்லுர் மீனவர் கூட்டுறவு சங்கம்
- தருமபுரி மாவட்ட வண்ண மீன் வளர்ப்போர் கூட்டுறவு சங்கம்
எண் | பொருள்கள் எண்ணிக்கை | பரப்பளவு |
---|---|---|
1.நீர்த்தேக்கம் | 6 | 840.38 ஹெக்டர் |
2. குளங்கள் மற்றும் நீர் நிலைகள் | இல்லை | இல்லை |
அ) பருவ கால நீர் நிலைகள் | 587 | 6279.8 |
ஆ) வற்றாத நீர் நிலைகள் | இல்லை | இல்லை |
3. பண்ணைகள் மற்றும் குளங்கள் | இல்லை | இல்லை |
அ) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் | இல்லை | இல்லை |
ஆ) வேளாண் இயந்திரங்கள் துறை | 8 | 1.05 ha |
இ) தனியார் பண்ணை | 24 | 2.3 ha |
4. மிதவை கூண்டு மீன்வளர்ப்பு | இல்லை | இல்லை |
பண்ணை | இல்லை | இல்லை |
வளர்ப்பு | 2 | 324meter3 |
5. அ)மீன்விதை உற்பத்தி | இல்லை | இல்லை |
கொள்ளளவு | இல்லை | இல்லை |
ஆ) மீன்வளர்ப்பு மையம் | 2 | 2.5 ஹெக்டர் |
கொள்ளளவு | 35 இலட்சம் | இல்லை |
நீர்த்தேக்கத்தில் உள்ள இருப்பு மற்றும் இயற்கை மீன்களின் வகைகள் பின்வரும் இருப்பு மற்றும் இயற்கை மீன்களின் வளர்ப்பு நீர்த்தேக்கத்தில் மேற்கொள்ளப்படுகிறது
I . இருப்பு வகை மீன்கள்.
- கட்லா
- ரோகு
- மிர்கால்
- சாதாகெண்டை
- புல்கெண்டை
II . இயற்கை வகை மீன்கள்.
- திலேப்பியா மற்றும் விரால்.
- மீன் விற்பனை விலை
- கட்லா, ரோகு மிர்கால் மற்ற இருப்பு வகை ரூ. 120 கிலோ..
- திலேப்பியா 150 கிராமுக்கு கீழ் ரூ.40 கிலோ
- திலேப்பியா 150 கிராமுக்கு மேல் 500 கிராமுக்கு கீழ் ரூ.60 கிலோ.
- திலேப்பியா 500 கிராமுக்கு மேல் ரூ.80 கிலோ
- விராலிகள் ரூ.200 கிலோ.
வ.எண் | நீர்த்தேக்கத்தின் பெயர் | மீன் இனத்தின் வகை இருப்பு இனம் இலக்கு (டன்னில்) | மீன் இனத்தின் வகை இயற்கை இனம் இலக்கு (டன்னில்) | மொத்தம் (டன்னில்) | மீன் இனத்தின் வகை இருப்பு இனம் சாதனை (டன்னில்) | மீன் இனத்தின் வகை இருப்பு இனம் சாதனை (டன்னில்) | மொத்தம் (டன்னில்) | வருவாய் |
---|---|---|---|---|---|---|---|---|
1. | சின்னாறு அணை | 16.00 | 10.00 | 26.00 | 4.940 | 10.940 | 15.880 | இல்லை |
2 | தும்பலஹள்ளி | 16.00 | 05.00 | 21.00 | 1.590 | 0.360 | 1.950 | இல்லை |
3 | நாகாவதி | 11.20 | 13.00 | 24.20 | 5.830 | 3.200 | 9.030 | இல்லை |
4 | வாணியாறு | 11.00 | 08.00 | 19.00 | 13.850 | 7.540 | 21.390 | இல்லை |
5 | தொப்பையாறு | 11.20 | 17.00 | 28.20 | 11.567 | 16.690 | 28.257 | 10,77,510.00 |
6 | கேசர்குலிஅல்லா | 11.20 | 03.50 | 14.70 | 5.580 | 1.120 | 6.800 | இல்லை |
தருமபுரியில் செயல்படுத்தப்படும் மீன்வளத்துறையின் திட்டங்கள் :
2013-14
- தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் பல்நோக்கு பண்ணை குட்டைகளில்மீன்வளர்ப்பினை மேற்கொள்ள 8 பயனாளிகளுக்குரூ.0.131 இலட்சம் மானியமாகவழங்கப்பட்டுள்ளது.
2014-15
- தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மீன்பிடி வலைகளுக்கு 50 விழுக்காடு மானியமாக 17 பயனாளிகளுக்கு ரூ.1.275 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது
- தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வண்ண மீன் வளர்ப்பு பண்ணை அமைக்க 25 பயனாளிகளுக்கு ரூ.6.79 இலட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
- தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் இருசக்கர வாகனம் மற்றும் ஐஸ் பெட்டி 25 சதவீத மானியத்தில் 39 பயனாளிகளுக்கு ரூ.3.77 இலட்சம் வழங்கப்படடுள்ளது
2015-16
- தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் மீன்பிடி வலைகளுக்கு 50 விழுக்காடு மானியமாக 15 பயனாளிகளுக்கு ரூ.0.875 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது
- தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பரிசல் 50 விழுக்காடு மானியமாக 38 பயனாளிகளுக்கு ரூ.1.76 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது
- தேசியவேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொப்பையாறு அணையில் மீதவை கூண்டுகளில் மீன்குஞ்சு வளர்க்க 2 அலகு மீதவை கூண்டுகள்ரூ.14.91 இலட்சத்தில் நிறுவப்பட்டு, பணிகள் நடைபெற்றுவருகிறது.
- நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.258 இலட்சம் செலவில் பஞசப்பள்ளி சின்னாறு அணை மற்றும் ஓகேனக்கல் அரசு மீன் பண்ணை பராமரிப்பு பணிகள் முடிவடைந்துள்ளது
- TAFCOFED – SBGF திட்டத்தின் கீழ் 4 சக்கர ஊர்தி பொலிரோ பிக்கப் நடமாடும் ரூ.5.46 இலட்சம் மீன் ஏற்றிச் செல்லும் விற்பனை ஊர்தி வழங்கப்பட்டது..
2016-17
- NADP தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2016-2017 தமிழ்நாட்டில் மீன்வளர்ப்பு பகுதிகளை விரிவுபடுத்திட மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவித்தல் திட்டத்தில் புதிய மீன் பண்ணை அமைத்து மீன்குஞ்சு இருப்பு செய்தமைக்கு மானியமாக 04 பயனாளிக்கு ரூ.1.05 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- NADP திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள நீர் நிரம்பியுள்ள நீர்நிலைகளில் நீர்களைகளை கட்டுப்படுத்த புல்கெண்டை மீன்குஞ்சுகள் 6500 எணணம 22684 இலட்சம்பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு ஏரிகளில் இருப்பு செய்யப்பட்டது
- Indira Awas Yojana மீனவர்களுக்கான இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 111 பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ள 102 பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
2017-18
- தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்திட்டத்தின் கீழ் 100 மீனவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.1.95 இலட்சத்தில் வழங்கப்பட்டது.
- சட்டப்பேரவையில் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட உள்நாட்டு மீனவர்களின் மீன்பிடிப்பு திறனை மேம்படுத்த 50 சதவீதம் மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல் வழங்கிட வலைக்கு 70 எண்ணமும், பரிசலுக்கு 54 எண்ணமும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட 50 சதவீதம் மானியத்தில் புதிய மீன்வளர்ப்பு பல்நோக்கு பண்ணைக்குட்டைகள் அமைக்க 5 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மீனவர் நலவாரியம் நலத்திட்ட உதவிகள் :
- 10வது, 12வது மற்றும் மேற்படிப்பு பயிலும் மீனவர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு கல்வி உதவி தொகை
- இயற்கை மரணம் மற்றும் மீன்பிடிப்பின்போது ஏற்படும் விபத்து தீர்வழி உதவித்தொகை.