தருமபுரி மாவட்டத்தில் சராசரி ஆண்டு மழையளவு 853.10 மி.மீட்டர் ஆகும். இம்மாவட்டத்தில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 210300 ல் சிறு, குறு விவசாயிகள் எண்ணிக்கை 190000 ஆகும். 70 விழுக்காடு மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால் விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. மாவட்டத்தில் உள்ள மொத்த பரப்பளவான 443741 ஹெக்டேரில் 166843 ஹெக்டேரை சாகுபடி பரப்பாகக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பாலும் இராகி மற்றும் பயறு வகை பயிர்கள் மானாவாரி நிலங்களில் பயிரிடுகின்றனர். விவசாய உற்பத்தியில் நிலைத்தன்மையை உறுதி செய்யவும்இ மக்கள்தொகை வளர்ச்சிக்கேற்ப உற்பத்தியை உயர்த்தவும் தேவையான அரசின் கொள்கைகளும் நோக்கங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.. இதன் மூலம் விவாசாயம் சார்ந்த தொழில்களை மேம்படுத்தப்படுவதுடன் ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் கிடைக்கப்பெறுகிறது.
இம்மாவட்ட விவசாயிகள் மாறிவரும் தொழில் நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் பயன்படுத்துவதிலும் முன்னோடியாக விளங்குவதால் வேளாண் உற்பத்தியில் தருமபுரி மாவட்டம் எப்போதுமே முன்னோடி மாவட்டங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
விவசாய உற்பத்தியை உயர்த்தவேண்டி பல வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தியும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தும் அதிக வளர்ச்சி விகிதத்தை அடைவதற்கான சவாலை விவசாயத்துறை திறமையாக எதிர் கொள்கிறது. விவசாயிகளுக்கு நல்ல வருவாயும் விவசாய பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் மூலம் அவர்களுடைய பொருளாதார நிலைமையை மேம்படுத்த ஏற்கனவே உள்ள பயிர் சுழற்சி மற்றும் பயிர் பரவலாக்கல் தொழில் நுட்பங்களுடன் கூடுதலாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்(KAVIADP), மாநில வேளாண் வளர்ச்சி திட்டம்(SADS), நீடித்த நிலையான தேசிய இயக்கம் (NMSA), முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம்(CMDDM), நீடித்த நிலையான பருத்தி இயக்கம்(SCCM), நுண்ணீர் பாசனம் மூலமாக நீர் மேலாண்மை பசுந்தாள் உரங்கள், உயிர் உரங்கள் இயற்கை உர வேளாண்மை ஒருங்கிணைந்த சத்து மேளாண்மை மேற்கொள்ளல் (INM) மூலம் மண் வளமேம்பாடு, நீடித்த நிலையான கரும்பு இயக்கம், ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை (IPM) இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பயிர் இழப்பீட்டினை ஈடு செய்ய பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்படுகிறது.
தகவல் அறியும் உரிமைச்சட்டம் :- பொது தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் நியமிப்பது பற்றிய விவரங்கள்
வ.எண் |
அலுவலகம் / பிரிவு / அலகு பெயர் |
உதவி பொது தகவல் அலுவலர் |
மேல்முறையீட்டு ஆணையம் |
1 |
பொது தகவல் அலுவலர் / வேளாண்மை துணை இயக்குநர்(மத்திய திட்டம்), |
உதவி பொது தகவல் அலுவலர் / வேளாண்மை உதவி இயக்குநர் |
மேல்முறையீட்டு அலுவலர், / வேளாண்மை இணை இயக்குநர், தருமபுரி |
மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
வ.எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
இயற்கை இடுபொருள் தயாரித்தலை ஊக்குவித்தல் |
ரூ.1,00,000/- ஒரு விவசாய குழு |
2 |
விவசாயிகளுக்கு தார்பாய்கள் வழங்குதல் |
ரூ.830/- விவசாயி |
3 |
உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல் |
ரூ.1500/- விவசாயி |
4 |
நெல் பயிருக்கு துத்தநாக சல்பேட் மற்றும் ஜிப்சம் இடுதலை ஊக்குவித்தல் |
ரூ.250/- ஏக்கர் |
5 |
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் – மரக்கன்றுகள் வழங்குதல் |
ரூ.15/- மரக்கன்று |
6 |
நெற்பயிரில் வரப்பு பயிர் சாகுபடி |
ரூ.60/- ஏக்கர் |
7 |
மாற்றுப்பயிர் சாகுபடி – சிறுதானியங்கள் |
ரூ.160/- ஏக்கர் |
8 |
மாற்றுப்பயிர் சாகுபடி – பயறு வகைகள் |
ரூ.400/- ஏக்கர் |
9 |
மாற்றுப்பயிர் சாகுபடி – எண்ணெய்வித்துக்கள் |
ரூ.3446/- ஏக்கர் |
10 |
பட்டதாரி இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் |
ரூ.1,00,000/- (பின்னேற்பு மானியம்) |
I – தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் – நெல் உற்பத்தி ஊக்குவித்தல் :- 2022-23
வ.எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
புதிதாக வெளியிடப்பட்ட இரகங்களில் விதை உற்பத்தியை ஊக்குவித்தல் (குறைந்தப்பட்சம் 10 வருடம்) |
ரூ.8000/ மெ.டன் |
2 |
புதிதாக வெளியிடப்பட்ட இரகங்களில் விதை விநியோகம் (குறைந்தப்பட்சம் 10 வருடம்) |
ரூ.20000/ மெ.டன் |
3 |
நெல் விதைப்பு கருவி விநியோகம் |
ரூ.2500/ எண்கள் |
II – சிறப்பு தொகுப்பு தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் – தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் 2022-23, சிறுதானியங்கள், பயறுவகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
சிறப்பு தொகுப்பு – தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் – சிறுதானியங்கள் |
ரூ.13,500/ ஹெக்டர் |
2 |
சிறப்பு தொகுப்பு – தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் – பயறுவகைகள் |
ரூ.13,500/ ஹெக்டர் |
3 |
சிறப்பு தொகுப்பு – தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றுதல் – எண்ணெய் வித்துக்கள் |
ரூ.22900/ ஹெக்டர் |
III – தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் – துவரையில் உற்பத்தியை பெருக்குதல் :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
துவரையில் உற்பத்தியை பெருக்குதல் |
ரூ.4,500/ ஹெக்டர் |
IV -தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் – பருத்தியில் தரமான விதை உற்பத்தி மற்றும் விதை விநியோகம் :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
பருத்தியில் தரமான விதை உற்பத்தி மற்றும் விதை விநியோகம் |
ரூ.180/ கிலோ |
V – தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் – கரும்பு :- 2022-23 (தனியார் சர்க்கரை ஆலை)
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
தாய்கனுக்கள் விநியோகம் |
ரூ.12500/ ஹெக்டர் |
2 |
நாற்று விநியோகம் |
ரூ.12500/ ஹெக்டர் |
3 |
ஒற்றை பரு விநியோகம் |
ரூ.3750/ ஹெக்டர் |
VI – உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு – பயறு வகைகள் :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
உளுந்துப் பயிரில் தொகுப்பு செயல்விளக்கங்கள் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.7500/ ஹெக்டர் |
2 |
துவரை – சான்று விதை விநியோகம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.5000/ குவிண்டால் |
3 |
உளுந்து – சான்று விதை விநியோகம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.5000/ குவிண்டால் |
4 |
தட்டைப்பயறு மற்றும் கொள்ளு – சான்று விதை விநியோகம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.5000/ குவிண்டால் |
5 |
துவரை விதை உற்பத்தி மானியம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.2500/ குவிண்டால் |
6 |
உளுந்து விதை உற்பத்தி மானியம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.2500/ குவிண்டால் |
7 |
பச்சைப்பயறு விதை உற்பத்தி மானியம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.2500/ குவிண்டால் |
8 |
தட்டைப்பயறு மற்றும் கொள்ளு – விதை உற்பத்தி மானியம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.2500/ குவிண்டால் |
9 |
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை – நுண்ணுட்ட கலவை விநியோகம் |
ரூ.500/ ஹெக்டர் |
10 |
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை – உயிர் உரங்கள் விநியோகம் |
ரூ.300/ ஹெக்டர் |
11 |
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை – பூச்சிக்கொல்லி மருந்து விநியோகம் |
ரூ.500/ ஹெக்டர் |
12 |
சுழல் கலப்பை விநியோகம் |
ரூ.34,000/ எண்கள் |
13 |
சுழல் கலப்பை விநியோகம் |
ரூ.42,000/ எண்கள் |
14 |
பேட்டரி மூலம் இயங்கும் விசைத்தெளிப்பான் விநியோகம் |
ரூ.3000/ எண்கள் |
15 |
பேட்டரி மூலம் இயங்கும் விசைத்தெளிப்பான் விநியோகம் |
ரூ.3800/ எண்கள் |
16 |
துவரை செயல்விளக்கத்திடல் |
ரூ.2500/ ஹெக்டர் |
VII – உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு – ஊட்டச்சத்து மிகு சிறுதானியங்கள்:- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
தொகுப்பு செயல்விளக்கங்கள் – சோளம் |
ரூ.6000/ ஹெக்டர் |
2 |
தொகுப்பு செயல்விளக்கங்கள் – கம்பு |
ரூ.6000/ ஹெக்டர் |
3 |
தொகுப்பு செயல்விளக்கங்கள் – ராகி |
ரூ.6000/ ஹெக்டர் |
4 |
தொகுப்பு செயல்விளக்கங்கள் – சாமை |
ரூ.6000/ ஹெக்டர் |
5 |
வீரியமிகு விதை விநியோகம் – சோளம் |
ரூ.10000/ குவிண்டால் |
6 |
வீரியமிகு விதை விநியோகம் –கம்பு |
ரூ.10000/ குவிண்டால் |
7 |
சோளம் – உயர் விளைச்சல் இரகம் விதை விநியோகம்(குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.3000/ குவிண்டால் |
8 |
கம்பு – உயர் விளைச்சல் இரகம் விதை விநியோகம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.3000/ குவிண்டால் |
9 |
இராகி – உயர் விளைச்சல் இரகம் விதை விநியோகம் (குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.3000/ குவிண்டால் |
10 |
சோளம் – உயர் விளைச்சல் இரகம் விதை விநியோகம் (அதிகப்பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.1500/ குவிண்டால் |
11 |
இராகி – உயர் விளைச்சல் இரகம் விதை விநியோகம் (அதிகப்பட்சம் 10 வருடங்கள்) |
ரூ. 1500/ குவிண்டால் |
12 |
சோளம் – (உயர் விளைச்சல் இரகம்) சான்று விதை உற்பத்தி மானியம்(குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.3000/ குவிண்டால் |
13 |
கம்பு – (உயர் விளைச்சல் இரகம்) சான்று விதை உற்பத்தி மானியம்(குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.3000/ குவிண்டால் |
14 |
இராகி – (உயர் விளைச்சல் இரகம்) சான்று விதை உற்பத்தி மானியம்(குறைந்த பட்சம் 10 வருடங்கள்) |
ரூ.3000/ குவிண்டால் |
15 |
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை -நுண்ணுட்ட கலவை விநியோகம் |
ரூ.500/ ஹெக்டர் |
16 |
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை –உயிர் உரங்கள் விநியோகம் |
ரூ.300/ ஹெக்டர் |
17 |
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை – பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிரியல் காரணிகள் விநியோகம் |
ரூ.500/ ஹெக்டர் |
18 |
வேளாண் கருவிகள் – கைத்தெளிப்பான் SC/ST, மகளிர், சிறு குறு விவசாயிகளுக்கு |
ரூ.750/ எண்கள் |
19 |
வேளாண் கருவிகள் – கைத்தெளிப்பான் இதர விவசாயிகளுக்கு |
ரூ.600/ எண்கள் |
20 |
பயிர் வாரியான பயிற்சி |
ரூ.14,000/- பயிற்சி |
VIII – உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு – (பருத்தி) :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
பருத்தி ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கங்கள் |
ரூ.8000/- ஹெக்டர் |
2 |
பருத்தியில் செயல்விளக்கங்கள் |
ரூ.9000/- ஹெக்டர் |
3 |
பருத்தியில் ஊடுபயிராக பயறு வகை செயல்விளக்கங்கள் |
ரூ.8000/- ஹெக்டர் |
4 |
உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் விநியோகம் |
ரூ.500 / ஹெக்டர் |
IX – உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு (கரும்பு) :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
கரும்பில் ஒற்றைபரு நடவு தொழில்நுட்பம் மற்றும் ஊடுபயிர் செயல்விளக்கங்கள் |
ரூ.9000/-ஹெக்டர் |
2 |
உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் விநியோகம் |
ரூ.500 ஹெக்டர் |
X – உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு – (மரப்பயிர் எண்ணெய்வித்துக்கள்) :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
வேம்பு நடவு |
ரூ.17000 / ஹெக்டர் |
2 |
புங்கம் நடவு |
ரூ.20000 / ஹெக்டர் |
XI – தேசிய இயக்கம் (எண்ணெய்வித்துக்கள்) :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
ஆதார விதை உற்பத்தி டால் |
ரூ.2500/ குவிண்டால் |
2 |
சான்று விதை உற்பத்தி |
ரூ.2500/ குவிண்டால் |
3 |
சான்று விதை விநியோகம் |
ரூ.4000/ குவிண்டால் |
4 |
தொகுப்பு செயல்விளக்கங்கள் – ஆமணக்கு |
ரூ.3000/ ஹெக்டர் |
5 |
நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுதல் |
ரூ.750/ ஹெக்டர் |
6 |
உயிர் உரங்கள் இடுதல் |
ரூ.300/ ஹெக்டர் |
7 |
நுண்ணுட்டக்கலவை இடுதல் |
ரூ.500/ ஹெக்டர் |
8 |
உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் விநியோகம் |
ரூ.500/ ஹெக்டர் |
9 |
விசைத்தெளிப்பான் விநியோகம் (8-12 லிட்டர் கொள்ளளவு) |
ரூ.3100/ எண்கள் |
10 |
சுழல் கலப்பை (35 குதிரைதிறன் இதர விவசாயிகளுக்கு) |
ரூ.34000/ எண்கள் |
11 |
சுழல் கலப்பை – 35 குதிரைதிறன் (மகளிர், SC/ST, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு) |
ரூ.42000 / எண்கள் |
12 |
தார்பாய் விநியோகம் |
ரூ.2,500/ எண்கள் |
13 |
விதைப்பு கருவி வாடகை எடுத்தல் |
ரூ.1000/ ஹெக்டர் |
XII – நீடித்த நிலையான பருத்தி இயக்கம் :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
பருத்தியில் அடர் நடவு |
ரூ.4900 / ஹெக்டர் |
2 |
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொகுப்பு விநியோகம் |
ரூ.1400 / ஹெக்டர் |
3 |
பருத்தியில் சுற்றுச்சூழல் மேலாண்மை |
ரூ.4200 / ஹெக்டர் |
4 |
பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க ட்ரோன் வாடகை எடுத்தல் |
ரூ.1250/ ஹெக்டர் |
XIII – நீடித்த நிலையான மேலாண்மை இயக்கம் – மானாவாரி வேளாண் வளர்ச்சி – ஒருங்கிணைந்த பண்ணையம் :- 2022 -23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
செயல்விளக்கங்கள் |
ரூ.5000 / ஹெக்டர் |
2 |
தீவனப்பயிர் |
ரூ.800 / ஹெக்டர் |
3 |
மண்புழு உரப்படுக்கை தயாரித்தல் |
ரூ.6000 / Unit |
4 |
தேனீ வளர்ப்பு |
ரூ.1600 / Unit |
5 |
பழ வகைப்பயிர் நடவு |
ரூ.2000 / ஹெக்டர் |
6 |
கறவை மாடு வளர்த்தல் – 1 எண் |
ரூ.15000 / எண்கள் |
7 |
ஆடு வளர்ப்பு – 10 எண் |
ரூ.1500 / எண்கள் |
8 |
கோழி வளர்ப்பு – 10 எண் |
ரூ.300 / எண்கள் |
XIV – முதலமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் :- 2022-23
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
அடிப்படை புள்ளி விவரங்கள் சேகரித்தல் |
ரூ.1000/cluster |
2 |
கோடை உழவு, திரவ உயிர் உரங்கள் தெளித்தல் |
ரூ.750/ஹெக்டர் |
3 |
உயிர் உரங்கள் விநியோகம் |
ரூ.150/ ஹெக்டர் |
4 |
சிவப்பு கடல் பாசி விநியோகம் |
ரூ.1250/ ஹெக்டர் |
5 |
ஜிப்சம் விநியோகம் |
ரூ.800/ ஹெக்டர் |
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் :
திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் மானியத்துடன் 13 ஜனவரி 2016 முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் (சென்னை தவிர) செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திட்டத்தின் நோக்கம்:
வேளாண்மையில் நிலையான உற்பத்திக்கு பின்வரும் வழிமுறைகளால் துணை நிற்பதே ஆகும்.
வறட்சி, புயல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் பயிர் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குதல்.
விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்தல்.
அறிவிக்கை செய்யப்பட்ட பிர்க்கா அளவிலான அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை பயிரிடும் விவசாயிகள் அனைவரும் (குத்தகை விவசாயிகள் உட்பட) இத்திட்டத்தில் சேர தகுதியானவர்கள்.
பயிர் கடன் மற்றும் விவசாய நகைக் கடன் பெறும் விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் அனைவரும் இத்திட்டத்தில் வங்கிகள் மூலமாக பதிவு செய்யலாம்.
நுண்ணீர் பாசனத்திட்டம்
வ. எண் |
திட்டம் / இனங்கள் |
மான்ய விவரம் (ரூபாய்) |
1 |
பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா – நுண்ணீர் பாசனத்திட்டம் |
1.சிறு / குறு விவசாயி – 100 % மான்யம்
2.பெரு விவசாயி – 75 % மான்யம் |
2 |
பிரதம மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா – துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் |
i |
டீசல் மோட்ரர் (அ) மின் மோட்ரர் அமைத்தல் |
50% (அ) ரூ.15,000 /- |
ii |
நீரை எடுத்து செல்ல பிவிசி குழாய்கள்அமைத்தல் |
50% (அ) ரூ.10,000 /- |
iii |
தரை நிலை நீரதேக்க தொட்டி அமைத்தல் |
50% (அ) ரூ.40,000 /- |