தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை
தோட்டக்கலை பயிர்களை பயிரிடுவதற்கான ஏற்ற மாவட்டங்களில் தருமபுரி மாவட்டம் ஒன்றாகும். சாகுபடிக்கு உட்பட்ட மொத்த பரப்பளவு 195740 எக்டர். அதில் தோட்டக்கலை பயிர்கள் சுமார் 80000 எக்டரில் பயிரிடப்பட்டுள்ளன. மா, வாழை, தக்காளி, வெண்டை, கத்தரி, முள்ளங்கி, கொடிகாய்கறிகள், மரவள்ளி, மஞ்சள், ரோஜா, மல்லிகை, நிலச்சம்பங்கி மற்றும் சாமந்தி போன்ற தோட்டக்கலைப் பயிர்கள் இம் மாவட்டத்தின் முக்கிய பயிர்களாகும். மாவட்டத்திற்கு ஆண்டு சராசரி மழை பொழிவு 853.1 மி.மீ.
உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவசாயிகளிடையே உயர் உற்பத்தி தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாகுபடி செய்ய பசுமைக்குடில், நிழல்வலைக்கூடாரம், நிலப்போர்வை, அதிக மகசூல் தரக்கூடிய காய்கறி குழித்தட்டு நாற்றுகள் மற்றும் பழக்கன்றுகள் வழங்கி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் :-
வ.எண் | அலுவலகம் / பிரிவு / அலகு பெயர் | உதவி பொது தகவல் அலுவலர் | மேல்முறையீட்டு ஆணையம் |
---|---|---|---|
1 | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், தருமபுரி | தோட்டக்கலை உதவி இயக்குநர் (நபொ) | தோட்டக்கலை துணை இயக்குநர் |
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் :
1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், தேசிய தோட்டக்கலை இயக்கம் (MIDH-NHM)
புதிய பரப்பு விரிவாக்க திட்டம்
- கலப்பின காய்கறிகளின் சாகுபடி (தக்காளி மற்றும் கத்தரி) அரசு தோட்டக்கலை பண்ணைகளில் குழித்தட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ. 20000/எக்டர் வீதம் மான்யமாக வழங்கப்படுகிறது.
- அடர்நடவு மா சாகுபடி 1 எக்டருக்கு ரூ. 9840/- மான்யமாக வழங்கப்படுகிறது.
- மலர் பயிர் சாகுபடி சாமந்தி பயிரிட 1 எக்டருக்கு ரூ. 16000 மற்றும் நிலச்சம்பங்கி சாகுபடிக்கும் 1 எக்டருக்கு ரூ. 60000 வீதம் இடு பொருட்கள் வழங்கப்படுகிறது.
- மஞ்சள் சாகுபடி – 1 எக்டருக்கு ரூ. 12000 வீதம் மான்யம் வழங்கப்படுகிறது.
- காய்கறி பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ஊக்கத் தொகையாக 1 எக்டருக்கு ரூ. 2,500/- பின்னேற்பு மான்யமாக வழங்கப்படுகிறது.
பாதுகாக்கப்பட்ட சாகுபடி
- பசுமைக்குடில் அமைப்புகளுக்கு 50 சதவிகிதம் ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 467.50 வீதம் ஒரு பயனாளிகளுக்கு அதிக பட்சம் 4000 சதுர மீட்டருக்கு வழங்கப்படுகிறது.
- நிழல்வலைக் கூடம் அமைப்பதற்கு ஒரு பயனாளிக்கு 50 சதவிகித மான்யமாக ஒரு சதுர மீட்டருக்கு ரூ. 355 வீதம் அதிக பட்சம் ஒரு பயனாளிகளுக்கு 4000 சதுர மீட்டருக்கு வழங்கப்படுகிறது.
- நிலப்போர்வை : 50 சதவிகிதம் மான்யமாக 1 எக்டருக்கு ரூ. 16000 வீதம் வழங்கப்படுகிறது.
- நீர் ஆதாரங்களை உருவாக்குதல் – தனிநபர்களுக்கான நீர்சேமிப்பு முறையை ஊக்குவிப்பதற்காக பாலிதீன் சீட் 20மீ x 20மீ x 3மீ என்ற அளவில் நீர் சேமிப்பு அமைப்பு அமைக்க ரூ. 75,000 மான்யமாக வழங்கப்படுகிறது.
தேனீ வளர்ப்பு மூலம் மகரந்த சேர்கை ஊக்குவித்தல்
- உற்பத்தியை அதிகரிக்க தேனீ காலனிகள் விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் மானியத்தில் ஒரு பெட்டியுடன் காலனிக்கு ரூ.1600/- மற்றும் தேன் பிரித்தெடுக்கும் இயந்திரம் 1 எண்ணிற்கு ரூ.8000/- வீதம் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை இயந்திரமயமாக்கல்
- 20HP மினி டிராக்டர் வாங்க ரூ.75000/- மற்றும் 8 HP பவர் டில்லருக்கு ரூ.60,000/-க்கு முறையே 25 சதவீதம் மற்றும் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த அறுவடைக்கு பின் செய் மேலாண்மை
- உற்பத்தி செய்யப்படும் பழங்கள் மற்றும் காய்கறிகளை தரம் பிரித்து சுத்தம் செய்து மற்றும் சிப்பமிடல் ஆகிய பணிகள் மேற்கொள்ள சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீதம் மானியமாக ரூ. 2.00 லட்சம் வழங்கப்படுகிறது.
- உற்பத்தி செய்யப்படும் வெங்காயங்களை சேமிக்க 50 சத மான்யத்தில் 25 மெட்ரிக்டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்பு அமைப்பு அமைக்க ரூ.0.875 லட்சம் மான்யமாக வழங்கப்படுகிறது.
2.பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKSY)
இந்த திட்டத்தின் கீழ் பாசன நீரை திறம்பட பயன்படுத்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் நுண்ணீர் பாசனம் அமைக்கும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சத மான்யத்தில் அதிகபட்சம் 2 எக்டர் வரையிலும் பெரு விவசாயிகளுக்கு 75 சத மான்யத்தில் 5 எக்டர் வரையிலும் நுண்ணீர் பாசனம் அமைக்க மான்யம் வழங்கப்படுகிறது. மேலும் ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இத்திட்டத்தில் பயனடையலாம்.
துணை நீர் மேலாண்மை (SWMA):-
- குழாய் கிணறு / ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ. 25,000/- மான்யமாக வழங்கப்படுகிறது. (இத்திட்டம் பாதுகாப்பான பிர்கா என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஏரியூர் மற்றும் தீர்த்தமலை பகுதிகள் மட்டும்)
- டீசல் மோட்டார் / மின்மோட்டார் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ. 15,000/- மான்யமாக வழங்கப்படுகிறது.
- சொட்டுநீர்பாசனம் அமைக்கும் பொழுது தலைமை அலகு அமைந்துள்ள இடத்திற்கும் வயல் அமைந்துள்ள இடத்திற்கும் இடையில் அமைக்கப்படும் பைப் லைனிற்கு மான்யமாக ரூ. 10,000/ எக்டர் – வழங்கப்படுகிறது.
- தரை மட்டத்தில் 114Cu.M அளவுள்ள நீர் சேமிப்பு தொட்டி அமைக்க ரூ. 40,000/- மான்யமாக வழங்கப்படுகிறது.
3.கூட்டுப் பண்ணையம் :
கூட்டு பண்ணையத்தின் கருத்து என்னவென்றால், ஒரு சிறிய பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை அடையாளம் கண்டு 20 விவசாயிகளுடன் விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் (FIG) அமைப்பது மற்றும் 5 விவசாயிகள் ஆர்வலர் குழுக்களை கொண்டு 1 உழவர் உற்பத்தியாளர் குழு (FPG) அமைக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும். இந்த குழுக்களுக்கு கூட்டு சாகுபடி கடன் வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகளை அணுக உள்ளீடுகளை கூட்டாக வாங்குவது போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் 185 விவசாயிகள் ஆர்வலர் குழுக்கள் (FIG) மற்றும் 37 விவசாயிகள் உற்பத்தியாளர் குழுக்கள் (FPG) 2020-21 நிதியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் FPG யின் திட்ட அமலாக்க திட்டத்தின் ஒப்புதலுக்கு பிறகு ஒவ்வொரு FPG க்கும் ரூ. 5.00 இலட்சம் கார்பஸ் நிதி வழங்கப்படுகிறது.
4.புதுப்பிக்கப்பட்ட பிரதான் மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (RPMFBY)
தருமபுரி மாவட்டத்தில் RPMFBY திட்டத்தின்கீழ் அறிவிக்கப்பட்டுள்ள தோட்டக்கலை பயிர்களான வாழை, கத்தரி, மஞ்சள், முட்டைகோஸ், தக்காளி மா மற்றும் மிளகாய் ஆகிய பயிர்களுக்கு காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அறிவிக்கப்பட்ட கிராமங்களில் உள்ள தோட்டக்கலை பயிர்களுக்கு விவசாயிகள் காப்பீடு செய்தால் இயற்கை பேரழிவுகள் காரணமாக பயிர்களுக்கு சேதங்கள் ஏற்பட்டால் காப்பீடு தொகை வழங்கப்படும்.
5. ஒருங்கிணைந்தபண்ணையஅமைப்பு- மானாவாரிநிலமேம்பாட்டுத் திட்டம்:
ஒரு எக்டர் பரப்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலைப் பண்ணையம் செய்ய 50 சத மானியமாக ரூ. 60000/- வழங்கப்படுகிறது. (இதில் தோட்டக்கலை சார்ந்த பயிர் சாகுபடி, தேனீ வளர்ப்பு நிரந்தர மண்புழுஉரக்கூடம் அமைத்தல், நாட்டுகோழி இனங்கள் வளர்த்தல், செம்மறி ஆடுகள் மற்றும் பால்மாடு/எருமை வளர்த்தல் போன்ற பணிகளுக்காக).
6. தேசியவேளாண்மைவளர்ச்சி திட்டம் (NADP):
- வெங்காய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எக்டருக்கு ரூ. 20000/-வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
- நிரந்தர பந்தல் கட்டமைப்பை அமைக்க ஒரு எக்டருக்குரூ. 2,00,000/-வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
- இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்: கீரை வகைகளுக்கு ஒரு எக்டருக்குரூ. 2500 -ம், வெண்டை, கத்திரி மற்றும் தக்காளி சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.3750- முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்க்கு ஒருஎக்டருக்கு ரூ. 5000/-ம் மனியமாக வழங்கப்படுகிறது.
7. ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுதிட்டம் (IHDS):
- சிறு பழபயிர்கள்(ரம்புட்டான், லிச்சி, பெர்சிமோன், அவகோடா, கிவி, பேஷன் பழம் போன்றவை) ஒருஎக்டருக்கு ரூ. 30000/-வீதம் மானியமாகவழங்கப்படுகிறது.
- பாரம்பரியபழம் மற்றும் காய்கறி சாகுபடிதிட்டம், ஒருஎக்டருக்குரூ. 15000/-வீதம் மானியமாகவழங்கப்படுகிறது.
- வறண்ட நிலபயிர்கள் (நாவல், நெல்லி, புளி, முதலியன) ஒரு எக்டருக்கு ரூ. 20,000/-வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
- காய்கறி விதைகள் (கத்திரி, வெண்டை, முருங்கை, பாகல், தக்காளி, கொத்தவரை விதைகள்) கொண்ட ஒரு கிட்டிற்கு ரூ. 10 வீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ஒரு நபருக்கு 6 கிட்டுகள் வழங்கப்படும்.
விவசாயிகளின் தகுதி :
- சொந்த விவசாய நிலங்களைக் கொண்ட அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.
- குத்தகை நிலமாக இருந்தால், பதிவு செய்யப்பட்ட குத்தகைகாலம் 10 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
- பாதுகாக்கப்பட்ட பயிர் சாகுபடிக்கும் மற்றும் பரப்பு விரிவாக்கம் போன்ற திட்டங்களை செயல்படுத்த நீர் பாசன அமைப்பு கட்டாயமாக இருக்க வேண்டும்.
- பயனாளிகளாகும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் அனைத்து ஆவணங்களையும் கட்டாயமாக இணைத்திருக்க வேண்டும்.
- இணைக்கப்படும் ஆவணங்கள் அனைத்தும் தற்போது புதியதாக வருவாய்த்துறை மூலம் பெறப்பட்டதாக இருக்க வேண்டும்.
தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் சலுகை பெற பயனாளிகள் கட்டாயமாக சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் :
- விண்ணப்ப படிவம்
- பயனாளி TN-Hortinet -ல் பதிவு செய்யப்பட வேண்டும்
- பயனாளி உழவன் செயலில் பதிவு செய்யப்பட வேண்டும்
- சிட்டா மற்றும் அடங்கல் (அசல்)
- நிலவரைபடம்
- ஆதார் அட்டை
- குத்தகைதாரர்களாக இருந்தால் குறைந்த பட்சம் 10 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்த பத்திரம் வழங்கப்பட வேண்டும்
- மண் மற்றும் நீர் பரிசோதனை அறிக்கைகள்
- பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் (3 எண்)
- குடும்பஅட்டைநகல் மற்றம் ஆதார் அட்டை நகல்
- வங்கி கணக்கு விவரம்
- ரூ. 50,000/- க்கு மேல்உள்ளதிட்டங்களுக்கு அபிடவிட் பத்திரம் இணைக்கப்பட வேண்டும்
- செயல்படுத்தும் அனைத்து திட்டஇனங்களுக்கும் பல்வேறு நிலையகளில் புகைப்படங்கள் எடுக்க வேண்டும்
- திட்டபணிகள் முடிந்ததும் தேசிய தோட்டக்கலை இயக்க சின்னம் பொறித்த திட்ட அறிவிப்பு பலகை அமைக்கப்பட வேண்டும்
பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் | முகவரி |
---|---|---|---|
தோட்டக்கலை துணை இயக்குநர் | 9655242451 | ddhdharmapuri@yahoo.com | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் (ந பொ) | 9443084223 | ddhdharmapuri@yahoo.com | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை அலுவலர் (தொழில்நுட்பம்) | 7904542700 | ddhdharmapuri@yahoo.com | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ) | 8122827137 | adh.dharmapuri@gmail.com | ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9443247427 | adhnallampalli12@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், நல்லம்பள்ளி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9790161522 | adhpennagaram@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், பென்னாகரம் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9600904914 | adhpld@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், பாலக்கோடு |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9677795513 | adhkarimangalam@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், காரிமங்கலம் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9442483102 | adhmorappur@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர், ஓருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், மொரப்பூர் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ) | 6379388255 | adhharur@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், அரூர் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 8015345067 | adhprpatty@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர், ஓருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், பாப்பிரெட்டிப்பட்டி |