தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை
தமிழ்நாட்டின் வடமேற்கு எல்லையில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டமானது இரண்டு வருவாய் கோட்டங்கள், ஏழு வருவாய் வட்டங்கள், எட்டு ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 470 வருவாய் கிராமங்களுடன் தமிழ்நாட்டின் மொத்த பரப்பில் 3.46 சதவிகிதத்தை (4497.77 ச.கி) கொண்டதாக திகழ்கிறது. இம்மாவட்டமானது தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் சாகுபடி செய்ய தரமான கரிசல் மற்றும் வண்டல மண் வகைகளுடன் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவான காலநிலையான வெப்பநிலை 170ஊ முதல்; 300ஊ மற்றும் சராசரி மழையளவு 857 மில்லி மீட்டர் கொண்டு சுமார் 80,000 எக்டர் பரப்பில் பிரதான தோட்டக்கலை பயிர்களான மா, மரவள்ளி, மஞ்சள், தக்காளி, கத்தரி, வெண்டை, புளி, தென்னை, சாமந்தி மற்றும் சம்பங்கி பயிரானது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் 35000 எக்டர் பரப்பில் காய்கறிகளும், 19000 எக்டர் பரப்பில் பழ பயிர்களும் 10000 எக்டர் பரப்பில் நறுமண பயிர்களும், 11000 எக்டர் மலைத்தோட்ட பயிர்களும், 1900 எக்டர் பரப்பில் மருந்து பயிர்களும், 3000 எக்டர் பரப்பில் மலர் பயிர்களும், 2000 எக்டர் பரப்பில் இதர தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டு மொத்த நிகர சாகுபடி பரப்பான 159024 எக்டரில் 35.5 சதவிகிதத்தை கொண்டுள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் தோட்டக்கலை சார்ந்த பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு உறுதுணையாக தருமபுரி, காரிமங்கலம், மொரப்பூர், நல்லம்பள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டியில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்த்திலும் பாலக்கோடு, பென்னாகரம் மற்றும் அரூரில் வட்டார தோட்டக்கலை விரிவாக்க மையங்களுடன் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு கீழ்கண்ட திட்ட மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் :-
வ.எண் | அலுவலகம் / பிரிவு / அலகு பெயர் | உதவி பொது தகவல் அலுவலர் | மேல்முறையீட்டு ஆணையம் |
---|---|---|---|
1 | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், தருமபுரி | தோட்டக்கலை உதவி இயக்குநர் (நபொ) | தோட்டக்கலை துணை இயக்குநர் |
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் :
1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் – தேசிய தோட்டக்கலை இயக்கம் (MIDH – NHM)
2. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசன திட்டம் (PMKSY)
3. துணை நீர் மேலாண்மைத் திட்டம் (SWMA)
4. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)
5. மானாவாரி பகுதி மேம்பாட்டுத்திட்டம் (RAD)
6. ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (IHDS)
7. பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)
8. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP)
1. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம், தேசிய தோட்டக்கலை இயக்கம் (MIDH-NHM)
தருமபுரி மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறையின் மூலம் தேசிய தோட்டக்கலை இயக்க திட்டம் 2022-23-ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட இனங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
NHM திட்டத்தில் பயனடைய விவசாயிகள் https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற இணையதளத்தில் தாங்களே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
வ.எண் | இனம் | மானிய சதவீதம் | மானியத்தொகை |
---|---|---|---|
I | பரப்பு விரிவாக்கம் | ||
1. | வீரிய ஒட்டு காய்கறிகள் | 40% | Rs.20,000/-எக்டர் |
2. | மா அடர்நடவு | 40% | Rs.9,840/-எக்டர் |
3. | கொய்யா அடர் நடவு | 40% | Rs.17,600/-எக்டர் |
4. | திசு வாழை | 40% | Rs.37,500/-எக்டர் |
5. | பப்பாளி | 40% | Rs.23,120/-எக்டர் |
6. | நெல்லி | 40% | Rs.14,400/-எக்டர் |
7. | உதிரி மலர்கள் | 40% | Rs.16,000/-எக்டர் |
8. | கிழங்கு வகை மலர்கள் | 40% | Rs.60,000/-எக்டர் |
9. | வாசனைப்பயிர்கள் | – | Rs.12,000/-எக்டர் |
II | நீர் அறுவடை அமைப்பு | ||
10. | நீர் அறுவடை அமைப்பு (1200 கன மீட்டர்) | 50% | Rs.75,000/-எண் |
III | பாதுகாப்பான முறையில் சாகுபடி | ||
11. | நிலப்போர்வை | 50% | Rs.16000/-எக்டர் |
IV | ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை | ||
12. | ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மை | 30% | Rs.1200/- எக்டர் |
V | அங்கக வேளாண்மை | ||
13. | அங்கக வேளாண்மை முதலாம் ஆண்டு | 50% | Rs.4,000/- எக்டர் |
14. | அங்கக வேளாண்மை இரண்டாம் ஆண்டு | 50% | Rs.3,000/- எக்டர் |
15. | அங்கக வேளாண்மை மூன்றாம் ஆண்டு | 50% | Rs.3,000/- எக்டர் |
16. | மண்புழு உரக்கூடம் | 50% | Rs.50,000/- எண் |
VI | மகசூல் அதிகரிப்பதற்கான திட்டம் தேனீ வளர்ப்பு | ||
17. | தேனீப்பெட்டி மற்றும் தேனீக்கள் | 40% | Rs.1,600/-எண் |
18. | தேன் பிழிந்தெடுக்கும் கருவி | 40% | Rs.8,000/-எண் |
VII | இயந்திரங்கள் | ||
19. | பவர் டில்லர் (8 HP மேல்) | 40% | Rs.60,000/-எண் |
VIII | அறுவடைக்கு பிந்தைய மேலாண்மை | ||
20. | சிப்பம் கட்டும் அறை (9மீ * 6மீ) | 50 % | Rs.2,00,000/-எண் |
21. | வெங்காய சேமிப்பு கிடங்கு | 50% | Rs.87,500/-எண் |
IX | சந்தைப்படுத்துதல் , உட்கட்டமைப்பு | ||
22. | நகரும் காய்கறி விற்பனை வண்டி | 50% | Rs.15,000/-எண் |
2. பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நுண்ணீர்ப்பாசன திட்டம் (PMKSY) :-
இத்திட்டத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்திலும், இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் சொட்டுநீர் தெளிப்புநீர்பாசன கருவிகள் வழங்கப்பட்டு உள்ளது. குறு விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டர் வரையிலும், சிறு விவசாயிகளுக்கு 2 ஹெக்டர் வரையிலும், இதர விவசாயிகளுக்கு 5 ஹெக்டர் வரையிலும் இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படுகிறது. சிறு குறு பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. குத்தகை நிலமாக இருப்பின் 7 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
விவசாயிகள் அரசு அங்கீகரித்தவைகளில் தாங்கள் விரும்பும் நிறுவனங்களின் மூலம் நுண்ணீர் பாசனம் அமைத்துக் கொள்ளலாம்.
நுண்ணீர் பாசன அமைப்பிற்கு பயிரின் இடைவெளிக்கு தகுந்தவாறு மானியங்கள் வழங்கப்படுகிறது.
இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன் குடும்பஅட்டைநகல், அடங்கல், கணினிசிட்டா, நிலவரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் அதற்கான வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் உள்ள வட்டார தோட்டக்கலை உதலி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயனடையுமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
திட்டத்தில் பயனடைய விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in:8080/Subsidy/ApplySubsidy என்ற இணையதளத்தில் தாங்களே தங்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
3.துணை நீர் மேலாண்மைத் திட்டம் :-
நுண்ணீர்ப் பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் அதற்குத் துணை நிற்கும் செயல்பாடுகளை மேற்கொள்ள விவசாயிகளுக்கு கீழ்க்கண்டவாறு மானியம் வழங்கப்படுகிறது.
வ. எண் | பணி | தகுதியுடைய பின்னேற்பு மானியம் |
1 | பாதுகாப்பான குறுவட்டங்களில் ஆழ்துளைக்கிணறு குழாய்க்கிணறு அமைத்தல் (சுஞ்சல் நத்தம், தீர்த்தமலை பிர்காவிற்கு மட்டும்) | அலகு ஒன்றிற்கு செலவிடப்பட்ட மொத்தத் தொகையில் 50 சதவீதத் தொகை ரூ.25,000-த்திற்கு மிகாமல். |
2 | டீசல் பம்புசெட் / மின் மோட்டார் நிறுவுதல் | டீசல் பம்பு செட் / மின் மோட்டார் பம்புசெட் ஒன்றின் விலையில் 50 சதவீதத் தொகை ரூ.15,000- த்திற்கு மிகாமல். |
3 | பாசனக் குழாய் நிறுவுதல் | குழாய்களின் விலையில் 50 சதவீதத் தொகை எக்டருக்கு ரூ.10,000 -க்கு மிகாமல். |
4. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் :-
ஆன்லைன் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php
வ. எண் | இனம் | மானிய சதவீதம் | மானியத்தொகை |
I | ஒருங்கிணைந்த பண்ணையம் | ||
1 | தோட்டக்கலை பண்ணை (100 அலகுகள்) | 50% | Rs.17,500/- எக்டர் |
2 | நாட்டு மாடு (1 எண்) | 50% | Rs 15,000/- எண் |
3 | ஆடு / செம்மறி ஆடு (4 + 1 எண்) | 50% | Rs.7,500 |
4 | தீவனப்பயிர் ((10 சென்ட் ) | 50% | Rs.800 |
5 | மண்புழு உரப்படுக்கை | 50% | Rs 6,000/- எண் |
6 | தேனீ வளர்ப்பு | 50% | Rs.3,200 |
5. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் (NADP) :-
ஆன்லைன் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php
வ. எண் | இனம் | மானிய சதவீதம் | மானியத்தொகை |
I | பரப்பு விரிவாக்கம் – விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க தேர்வு செய்யப்பட்ட பயிர்களை சாகுபடி செய்தல் | ||
1 | வெங்காயம் | 40% | Rs.20,000/- எக்டர் |
2 | பாரம்பரிய காய்கறிகள் பரப்பு விரிவாக்கம் | 40% | Rs.20,000/- எக்டர் |
II | தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் சிறப்பு அமைப்புகள் | ||
3 | பந்தல் அமைத்தல் | 50% | Rs.2,00,000/- எக்டர் |
4 | தாங்கி குச்சிகள் அமைத்தல் | 50% | Rs.25,000/- எக்டர் |
களைப்போர்வை | 50% | Rs.21/- (ச.மீ) | |
III | அங்கக வேளாண்மை | ||
5 | அங்கக வேளாண்மை சாகுபடி இரண்டாம் ஆண்டு | 50% | Rs.5,000/- எக்டர் |
6 | அங்கக வேளாண்மை சாகுபடி மூன்றாம் ஆண்டு | 50% | Rs.5,000/- எக்டர் |
IV | ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை | ||
7 | சூரிய விளக்கு பொறி | 50% | Rs.4,000/- எண் |
8 | இனக்கவர்ச்சி பொறி | 50% | Rs.1,200/- எண் |
9 | மஞ்சள் அட்டை பொறி | 50% | Rs.1,200/- எண் |
v | துல்லிய பண்ணையத் திட்டம் | 50% | Rs.15,000/- எக்டர் |
6.மாநில தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (SHDS) :-
ஆன்லைன் பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php
வ. எண் | இனம் | மானிய சதவீதம் | மானியத்தொகை | |||
1 | அரசு மாணவியர் விடுதியில் தோட்டம் அமைத்தல் | 100% | Rs.8000/- எண் | |||
2 | துல்லிய பண்ணையத் திட்டம் | 50% | Rs.15,000/- எக்டர் | |||
3 | காளான் வளர்ப்பு குடில் | 50% | Rs.50,000/- எண் | |||
4 | காய்கறி சாகுபடிக்கு ஊக்கத் தொகை | 40% | Rs.20,000/- எண் | |||
5 | தென்னையில் ஊடுபயிராக வாழை | 40% | Rs.26,250/- எக்டர் | |||
6 | வாழையில் ஊடுபயிராக காய்கறிகள் | 40% | RS.10,000/- எக்டர் | |||
7 | நெகிழி கூடைகள் | 50% | Rs.3,750/- எண் | |||
8 | அலுமினிய ஏணி | 50% | Rs.10,000/- எண் | |||
9 | பழங்கள் அறுவடை செய்யும் வலை | 50% | Rs.250/- எண் | |||
10 | மலர் அறுவடைக்கான முகப்பு விளக்கு | 50% | Rs.250/- எண் | |||
11 | கவாத்து கத்திரிக்கோல் | 50% | Rs.200/- எண் | |||
12 | நாப்ஸாக் தெளிப்பான் (8 – 12 லிட்டர்) | 50% | Rs.3100/- எண் | |||
13 | நாப்ஸாக் தெளிப்பான் (12 – 14 லிட்டர்) | 50% | Rs.3,800/- எண் | |||
14 | மரவள்ளி கரணை வெட்டும் இயந்திரம் | 50% | Rs.3,500/- எண் | |||
15 | வெற்றிலையில் ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி மேலாண்மை | 50% | Rs.10,000/- எக்டர் | |||
16 | மூலிகைத் தோட்டம் அமைத்தல் | 50% | Rs.750/- எண் |
7.திருந்திய பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் (RPMFBY) :-
இத்திட்டமானதுஇயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும்,விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கச் செய்து, அவர்களை விவசாயத்தில் நிலைபெறசெய்யவும்,விவசாய பெருமக்களுக்கு உற்பத்தி இழப்பு ஏற்படும் அபாயத்திலிருந்து பாதுகாப்பதுடன் உணவு பாதுகாப்பிற்காக விவசாயிகளுக்கு கடன் உதவி தொடர்ந்து கிடைப்பதை உறுதி படுத்தி பயிர் சாகுபடியை மேம்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றது. இத்திட்டத்தின் மூலம் கீழ்கண்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
ராபி பருவம் – வாழை,வெங்காயம், மரவள்ளி, தக்காளி, கத்திரி மற்றும் வெண்டை.
8.கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் (KAVIADP):-
வ.எண் | இனம் | மானிய சதவீதம் | மானியத்தொகை | |||
---|---|---|---|---|---|---|
1 | சந்தைகளில் காய்கறிகள் வரத்தினை அதிகரிக்க காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல் | 75% | Rs.30/- எண் | |||
2 | பழச்செடிகள் தொகுப்பு வழங்குதல் | 75% | Rs120/- எண் | |||
3 | காய்கறி விதை தளைகள் விநியோகம் | 75% | Rs.7,500 /- எக்டர் | |||
4 | பல்லாண்டு தோட்டக்கலை பயிர்களின் பரப்பு விரிவாக்கம் | 30% | Rs.18,000/- எக்டர் | |||
5 | காளான் வளர்ப்பு கூடம் அமைத்தல் | 50% | Rs.1,00,000/- எண் |
பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் | முகவரி |
---|---|---|---|
தோட்டக்கலை துணை இயக்குநர் | 9655242451 | ddhdharmapuri@yahoo.com | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் (ந பொ) | 9790161522 | ddhdharmapuri@yahoo.com | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை அலுவலர் (தொழில்நுட்பம்) | 7904542700 | ddhdharmapuri@yahoo.com | தோட்டக்கலை துணை இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ) | 6379144541 | adh.dharmapuri@gmail.com | ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9443084223 | adhnallampalli12@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலக வளாகம், நல்லம்பள்ளி |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9443247427 | adhpennagaram@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில், பென்னாகரம் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9600904914 | adhpld@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், பாலக்கோடு |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 8015345068 | adhkarimangalam@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர், ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், காரிமங்கலம் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9677795513 | adhmorappur@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர், ஓருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், மொரப்பூர் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் (பொ) | 7418653569 | adhharur@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம் வளாகம், அரூர் |
தோட்டக்கலை உதவி இயக்குநர் | 9442483102 | adhprpatty@gmail.com | தோட்டக்கலை உதவி இயக்குநர், ஓருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், பாப்பிரெட்டிப்பட்டி |