மூடு

பட்டு வளர்ச்சித்துறை

மல்பெரி நடவு மானியம் :

உயர் ரக மல்பெரி புது நடவு செய்யும் விவசாயிகளுக்கு 1 ஏக்கருக்கு ரூ.10,500/- நடவு மானியம் வழங்கப்படுகிறது.அதிகபட்சமாக 5.00 ஏக்கர் வரை வழங்கப்படுகிறது.

தனியான புழு வளர்ப்பு மானியம் :

தனியான புழு வளர்ப்பு மனை கட்டும் விவசாயிகளுக்கு மூன்று நிலைகளில் கீழ்கண்டவாறு மானியம் வழங்கப்படுகிறது.

புழு வளர்ப்பு மனை கட்டும் மானியம்
புழு வளர்ப்பு மனை பரப்பு அலகு மதிப்பீடு (இலட்சம்)ரூ மானியம் (இலட்சம்)ரூ %
நிலை-1 1500 சதுர அடிக்கு மேல் 2.75 0.825 30
நிலை-2 1000-1500 சதுர அடிக்குள் 1.75 0.875 50
நிலை-3 700-1000 சதுர அடிக்குள் 0.90 0.630 70

சொட்டுநீர் பாசனம் :

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு விவசாயிகளுக்கு 01 ஏக்கருக்கு ரூ.30,000/- மானியமும் பெரு விவசாயிகளுக்கு 01 ஏக்கருக்கு ரூ.22,500/- மானியமும் வழங்கப்படுகிறது.அதிகபட்சமாக 5.00 ஏக்கர் வரை வழங்கப்படுகிறது

விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம்

பட்டு வளர்ப்பு மேற்கொள்ளும் கிராமங்களில் பட்டு விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்படுகிறது. இக்கூட்டத்தில் விவசாயிகளுக்கு புழுவளர்ப்பில் பதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் எடுத்துரைக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் பட்டு விவசாயிகள், பட்டு விஞ்ஞானிகள் மற்றும் வங்கி அலுவர்கள் கலந்துகொள்கின்றனர்.

உதவி இயக்குநர், பட்டு வளர்ச்சித்துறை, தருமபுரி