மூடு

வேலைவாய்ப்பு அலுவலகம்

கடகத்தூரில், ஐ.டி.ஐ. வளாகத்தில்அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் செயல்படுகிறது.

அலுவலகத்தின் செயல்பாடுகள் :

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வேலைவாய்ப்பு பிரிவின் கீழ், கோவை மண்டலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்ப அலுவலகத்தில், பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்ப அலுவலக பதிவுகள் மேற்கொள்ளுதல், பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்தல் போன்ற வாலாயமான பணிகளுடன், தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டி தேர்வுகள், வங்கிகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள், மாநில மற்றும் மத்திய அரசு தேர்வாணையங்களால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள் எழுதி தேர்ச்சி பெற ஏதுவாக போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துதல், மெகா தனியார் துறை வேலைவாயப்பு கூட்டங்கள் நடத்துதல், ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமையில் மாற்றுத் திறனாளிகளுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு கூட்டங்கள் நடத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பதிவு விவரம் : 

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 1,84,513 மனுதாரர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்து உயிர்பதிவேட்டில் உள்ளனர். இவர்களின்   88,185 பேர் பெண்களாவர்.

முன்னுரிமை பதிவு :
முன்னுரிமை சான்று பெற வேண்டிய அலுவலர்
ஆதரவற்ற விதவை வருவாய் கோட்டாட்சியர்
கலப்பு திருமணம் வட்டாட்சியர் மற்றும் சார்பதிவாளர்
முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவரை சார்ந்தோர் முன்னாள் படை வீரர்  நல அலுவலர்
மாற்றுத்திறனாளிகள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் தேசிய அடையாள அட்டை
நில ஆர்ஜிதம் தனிவட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவார்டு நகல்
தாய், தந்தையற்றவர் (17 வயதிற்குள்) அனாதை இல்லம் / வட்டாட்சியர்

தன்னார்வ பயிலும் வட்டம் :

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வ பயிலும் வட்டத்தின் வழியாக பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள்  நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய மாநில அரசு நிறுவனங்களால் அறிவிக்கப்பட்ட பெரும்பாலான பணிக்காலியிடங்கள் போட்டித் தேர்வுகள் மூலமாக நிரப்பப்படுகின்றன. பெரும்பாலான இளைஞர்களின் கோரிக்கை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதாகும்.  கடந்த 3 ஆண்டுகளில் நடத்தப்பட்ட இலவச பயிற்சிகளின் வழியாக நபர்கள் பல்வேறு வகையான அரசுத் தேர்வுகளுக்கு தேர்வு செய்யப்பட்டு தற்போது    பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.   UPSC, TNPSC, BANKING EXAM  உள்ளிட்ட அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான 4000-க்கும்  மேற்பட்ட புத்தகங்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நுாலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.   போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் தொழில்நெறிவழிகாட்டுதலுக்காக இக்கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக ஆண்டுதோறும் ஒரு கல்லுாரியில் நடத்தப்பட்டு வருகிறது.

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் :

கடந்த 2015ம் ஆண்டு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தால் நடத்தப்பட்ட மெகா தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள மூலமாக 8305 பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பது குறிப்பிடத்ததக்கது.கடந்த  நவம்பர் மாதம் 4ம் தேதி அரசு கலை கல்லுாரி தர்மபுரியில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது.  இதில் 5000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு 1100-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்கள் பணிநியமனம் பெற்றனர்.

திறன் மேம்பாட்டு பயிற்சி :

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் வழியாக திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதற்கான பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.   இத்திறன் மேம்பாட்டு நிறுவனங்கள் பல்வேறு குறுகிய கால பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகின்றனர். ஓட்டுநர்களுக்கு இலவசமாக  ஓட்டுநர் பயிற்சியும், மகளிர்க்கு தையல் பயிற்சி, எம்ப்ராய்டரி பயிற்சி மற்றும் கணினி பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  மேலும், இம்மாதிரி திறன் மேம்பாட்டு பயிற்சி பெறக்கூடிய பெரும்பாலானவர்களுக்கு பயிற்சி முடிவில் பணிநியமன வாய்ப்புகளும் ஏற்படுத்தி தரப்படுகிறது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டம் :

தமிழ்நாடு  அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் பதிவு செய்து  வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்காக  2006ஆம் ஆண்டு  வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது.   தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளது தேதி வரை 1,84,000 வேலைநாடுநர்கள்  பதிவு செய்துள்ளனர்.   இத்திட்டத்தின் கீழ்   கடந்த மூன்றாண்டுகளில்    பயனாளிகளுக்கு உதவித் தொகையாக   ரூ. 75,00,000/-  ம் மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த மூன்றாண்டுகளில் ரூ. 72,00,000/- வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாற்றுத்திறனாளிகள் உட்பட 3,999 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். தற்போது உதவித் தொகைய கீழ்க்கண்டவாறு வழங்கப்படுகிறது.

உதவித்தொகை  விவரம் :
கல்வித்தகுதி தற்போது வழங்கப்படும் தொகை
பத்தாம்வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200/-
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300/-
12 ம் வகுப்பு தேர்ச்சி  / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு ரூ.400/-
பட்டதாரிகள் / முதுகலைக்பட்டதாரிகளுக்கு ரூ.600/-
  • வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் உயிர்ப்பதிவேட்டில் காத்திருத்தல் வேண்டும்.
  • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50,000.
  • வயது உச்ச வரம்பு : இதர பிரிவினருக்கு 40 ஆண்டுகள்,  (SC/ST) 45 வயது வரை.

மாற்றுத் திறனாளிகள் :

2015 ஆம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.

உதவித்தொகை விவரம் :
கல்வித்தகுதி தற்போது வழங்கப்படும் தொகை
பத்தாம்வகுப்பு  மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு ரூ.600/-
12 ம்  வகுப்பு  மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு      தேர்ச்சி  / அதற்கு சமமான தகுதி பெற்றவர்களுக்கு ரூ.750/-
பட்டதாரிகள் / முதுகலைக்பட்டதாரிகளுக்கு ரூ.1000/-
  • மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 1 ஆண்டு உயிர்ப்பதிவேட்டில் காத்திருத்தல் வேண்டும்.
  • வயது உச்ச வரம்பு இல்லை.