மூடு

பொதுப்பணித்துறை செயல்பாடுகள்

தேதி : 01/01/2021 - 31/12/2023 | துறை: பொதுப்பணித்துறை
  • பொதுப்பணித்துறை தமிழகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல முயற்சிகள் எடுத்து அரசின் திட்டங்களை சிறந்த முறையில் பொறியியல் சிறப்பறிவுத் திறத்துடன் பல்வேறு அரசுத் துறைகளின் கட்டடப் பணிகளை செயல்படுத்துவதில் மிகவும் பழமைவாய்ந்த முதன்மையான பங்கு வகிக்கும் தொழில் நுட்ப துறையாகும்.
  • இத்துறையின் முக்கிய பங்குஅரசின் மூலதனச் சொத்துக்களை உருவாக்குவது மற்றும் வியப்புறும் வகையில் விலைமதிப்புள்ள நினைவு சின்னங்களும் பொதுக் கட்டடங்களும் உருவாக்குவதாகும்.
  • அரசின் அனைத்து பொறியியல் துறைகளுக்கும் தாய்த் துறையாக பொதுப்பணித்துறை கட்டட அமைப்பு விளங்குகிறது. நாட்டின் ஆரோக்கியமான மற்றும் விரைவான வளர்ச்சியில் மிகுந்த நாட்டம் கொண்டு ஊக்கத்துடனும், வியக்கத்தக்க கலை நயத்தோடும், அயராத கடின உழைப்போடும் பல்வேறு அரசுத் துறைகளுக்கு கட்டடங்களை உருவாக்கியும், அவற்றை, பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் போன்ற தலையாய கடமையாக மேற்கொண்டு பொதுப்பணித்துறை பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது.
  • பொதுப்பணித்துறையின் கட்டட அமைப்பு, மாநில அரசின் பொதுக் கட்டடங்களை திட்டமிடுதல், வடிவமைத்தல், கட்டுமானம் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் தேவைகளுக்கேற்ப அவற்றின் தொடர்புடைய பணிகளை நிறைவேற்றி வருகிறது.
  • பொதுப்பணித்துறை மாநில மற்றும் மத்திய, அரசு சார்ந்த நிறுவனங்கள், கழகங்கள் ஆகியவற்றுக்கான கட்டட கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
  • நினைவுச் சின்னங்கள், நினைவகங்கள் கட்டுதல் மற்றும் நிறுவுதல் ஆகிய பணிகளும் இவ்வமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் பாரம்பரிய கட்டடங்களை புதுப்பித்தல், புனரமைத்தல் ஆகிய பணிகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது.
  • அவசரகால சுனாமி மறுகட்டமைப்புத் திட்டம் போன்ற பேரீடர் பணிகளை செயல்படுத்துதல், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியின்கீழ், ஊராட்சி பகுதி மேம்பாட்டு திட்டப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது.
  • அரசு ஆய்வு மாளிகைகள் மற்றும் சுற்றுலா மாளிகைகள், மாண்புமிகு நீதியரசர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற மிகமிக முக்கிய பிரமுகர்களுக்கான மாளிகைகளை இவ்வமைப்பு பராமரித்து வருகிறது.
  • கட்டடங்களின் மதிப்பீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. திரையரங்குகள், பொதுக் கட்டடங்கள் ஆகியவற்றுக்கான கட்டட தர உறுதிச் சான்று மற்றும் அரசு அலுவலகங்களுக்காக வாடகைக்கு எடுக்கப்படும் தனியார் கட்டடங்களுக்கு கட்டட நியாய வாடகை சான்றிதழ் ஆகியவற்றினை இவ்வமைப்பு வழங்கி வருகிறது.
  • கட்டட அமைப்பு, மிக முக்கிய மற்றும் மிகமிக முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது மேற்கொள்ளப்படும் பணிகளான, மேடை அமைத்தல், தடைவேளி அமைத்தல், ஒலி மற்றும் ஒளி அமைத்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

பயனாளி:

பொதுப்பணித்துறை செயல்பாடுகள்

பயன்கள்:

அரசு ஆய்வு மாளிகைகள் மற்றும் சுற்றுலா மாளிகைகள், மாண்புமிகு நீதியரசர்கள், அமைச்சர்கள் மற்றும் பிற மிகமிக முக்கிய பிரமுகர்களுக்கான மாளிகைகளை இவ்வமைப்பு பராமரித்து வருகிறது

விண்ணப்பிப்பது எப்படி?

பொதுப்பணித்துறை மாநில மற்றும் மத்திய, அரசு சார்ந்த நிறுவனங்கள், கழகங்கள் ஆகியவற்றுக்கான கட்டட கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது