மூடு

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

தேதி : 01/01/2021 - 31/12/2023

1.தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை

  • சிறு பழ பயிர்கள்: (ரம்புட்டான், லிச்சி, பெர்சிமோன், அவகாடோ, கிவி, பேஷன் பழம் போன்றவை) ஒரு எக்டருக்கு ரூ.30000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • பாரம்பரிய பழம் மற்றும் காய்கறி சாகுபடி திட்டம், ஒரு எக்டருக்கு ரூ.15000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • வறண்ட நில பயிர்கள் (நாவல், நெல்லி, புளி, முதலியன) ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • காய்கறி விதை கிட் விநியோகம் (கத்திரிக்காய், வெண்டைக்காய், முருங்கை, பாகற்காய், தக்காளி, கொத்தவரை), ஒரு கிட்டுக்கு ரூ.10 மானியமாக வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்திற்கு 6 கிட்டுகள் வீதம் வழங்கப்படுகிறது

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் / குத்தகைக்கு விடப்பட்ட நிலம் (10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை) இருக்க வேண்டும்.

  • விவசாயிகள் வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை / குடும்ப அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
  • நடவுப் பொருள்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவினங்களை விவசாயிகளே மேற்கொள்ள வேண்டும்.
  • நிதி ஒதுக்கீடு பொது பிரிவினருக்கு 79.843 சதவீதமும், SC பிரிவினருக்கு 19.147 சதவீதமும், ST பிரிவினருக்கு 1.01 சதவீதமும் மற்றும் பெண்களுக்கு மொத்தம் 30 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது
  • காய்கறிகளுக்கு 2 எக்டர் வரை மற்றும் பழங்களுக்கு 4 எக்டர் வரை இத்திட்டத்தின் மூலம் பயனடையலாம்.
  • நீரில் கரையக்கூடிய உரங்கள், தாவர பாதுகாப்பு இரசாயனங்கள் மற்றும் உயிர் உரங்கள் போன்றவை பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.
  • விவசாயி அந்தந்த பகுதிக்கு ஏற்ற பழங்கள் மற்றும் காய்கறி வகைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
  • மானியத் தொகையை விட நடவுப் பொருள்களின் விலை அதிகமாக இருந்தால், அதற்குண்டான தொகையை விவசாயிகளே செலுத்த வேண்டும்.
  • திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்
  • வட்டாரங்களில் பயனாளியின் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியுடன் முன்னுரிமை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

2.தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்

  • வெங்காய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு எக்டருக்கு ரூ.20000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது
  • பந்தல்: நிரந்தர பந்தல் கட்டமைப்பை அமைக்க ஒரு எக்டருக்கு ரூ.200000/- வீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்: கீரை வகைகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.2500-ம், வெண்டைக்காய், கத்திரிக்காய் மற்றும் தக்காளிக்கு ஒரு எக்டருக்கு ரூ.3750-ம், முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவர்-க்கு ஒரு எக்டருக்கு ரூ.5000-ம் மானியமாக வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • விவசாயிகளுக்கு சொந்தமான நிலம் / குத்தகைக்கு விடப்பட்ட நிலம் (10 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை) இருக்க வேண்டும்.
  • விவசாயிகள் வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை / குடும்ப அட்டை ஆகியவற்றை சமா்ப்பிக்கப்பட வேண்டும்.
  • நடவுப் பொருள்களை எடுத்து செல்வதற்கான போக்குவரத்து செலவினங்களை விவசாயிகளே மேற்கொள்ள வேண்டும்.
  • NPOP சான்றிதழ் பெற விண்ணப்பித்த அனைத்து விவசாயிகள் குழுக்களும் மற்றும் தனிப்பட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் தகுதியானவர்கள்.
  • இத்திட்டத்தில் உள்ள விவசாயிகள் அவா்களின் வயல்களை Bhuvan App-இல் புகைப்படத்துடன் பதிவு செய்ய வேண்டும்.
  • நிதி ஒதுக்கீடு பொது பிரிவினருக்கு 80 சதவீதமும், SC பிரிவினருக்கு 19 சதவீதமும், ST பிரிவினருக்கு 1 சதவீதமும் மற்றும் பெண்களுக்கு மொத்தம் 30 சதவீதமும் ஒதுக்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான நடைமுறைகள்

  • உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.
  • வட்டாரங்களில் பயனாளியின் விண்ணப்பம் பெறப்பட்ட தேதியுடன் முன்னுரிமை பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும்.

3.கூட்டு பண்ணையம்

கூட்டு பண்ணையத்தின் கருத்து என்னவென்றால், ஒரு சிறிய பகுதியில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளை அடையாளம் கண்டு 20 விவசாயிகளுடன் விவசாயிகள் ஆா்வலா் குழுக்கள் (FIG) அமைப்பது. 5 FIG கள் 100 விவசாயிகளுடன் உழவர் உற்பத்தியாளர் குழுவில் (FPG) ஒருங்கிணைக்கப்படும். கூட்டு சாகுபடி, கடன் வசதிகள் மற்றும் சந்தை இணைப்புகளை அணுக உள்ளீடுகளை கூட்டாக வாங்குவது போன்றவற்றை FIG மற்றும் FPG ஊக்குவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 150 FIG-கள் மற்றும் 30 FPG-கள் கூட்டு விவசாயத்தை மேம்படுத்துவதற்காக 2020-21 நிதியாண்டில் உருவாக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் FPG-யின் திட்ட அமலாக்கத் திட்டத்தின் ஒப்புதலுக்குப் பிறகு ஒவ்வொரு FPG-க்கும் ரூ. 5 லட்சம் கார்பஸ் நிதி வழங்கப்படுகிறது.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • இத்திட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தகுதியானவா்கள். ஆனால் SF/MF/SC/ST/பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • சிறு விவசாய குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  • குத்தகைதாரர்களாக இருந்தால், பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் வழங்கப்பட வேண்டும்.

4.பிரதான் மந்திரியின் வேளாண்மை நுண்ணிர் பாசன திட்டம்

இந்தத் திட்டத்தின் கீழ், பாசன நீரை திறம்பட பயன்படுத்துவதை வலியுறுத்துவதற்காக, நுண்ணீா் பாசனம் அமைப்பதை ஊக்குவிக்கவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பெரு விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்குவதன் மூலம் நுண்ணீா் பாசன வசதியை அமைக்க விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு பயனாளி 5 எக்டர் வரை நிதி உதவி பெற முடியும். ஏற்கனவே பயனடைந்த விவசாயிகள் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதுப்பித்து மானியத்தையும் பெறலாம்.

திட்டத்தின் பயனை பெறுவதற்குகான தகுதிகள்

  • மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நுண்ணிர்ப்பாசன திட்டத்தின் கீழ் பயனாளிக்கு கிடைக்கும் மொத்த நிதி உதவி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 55% மற்றும் பிற விவசாயிகளுக்கு 45% ஆகும்
  • ஒரு பயனாளிக்கு 5 எக்டருக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும்.
  • ஒரு முறை மானிய சலுகைகளைப் பெற்றுள்ள பயனாளிகள், அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு மானியம் பெற இயலாது
  • ஒரு பயனாளி தனது பயிர் இடைவெளியில் ஒன்றுக்கு மேற்பட்ட பயிர்களைக் கொண்டிருந்தால், அதற்கேற்ற சொட்டு நீர்ப்பாசன முறையை நிறுவ மானியம் கிடைக்கும்

பயனாளி:

அனைத்து விவசாயிகளும்

பயன்கள்:

மானியம்

விண்ணப்பிப்பது எப்படி?

உழவன் பதிவு மற்றும் HORTNET இன் மூலம் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளை தோ்வு செய்ய வேண்டும்.