பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மையினர் நலம் பல்வேறு நலத்திட்டங்கள்
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தருமபுரி.
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அரசு செயலாளரின் தலைமையில் இயங்கி வருகிறது. மாநில அளவில் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்குநர் பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களையும், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்திட்டங்களையும், சிறுபான்மையினர் நல இயக்குநர் சிறுபான்மையினர் நலத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி நிர்வாகத்தின்கீழ் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் கீழ்கண்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்:
1. கல்வி உதவித்தொகை வழங்குதல்
2. ஊரக பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் .
3. விடுதிகள்.
4. விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்.
5. விலையில்லா சலவை பெட்டி வழங்கும் திட்டம்.
6. விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்.
7. இலவச வீட்டுமனைப்பட்டா.
8. நரிக்குறவர் நல வாரியம்.
9. உலமாக்கள் & பணியாளர் நல வரியம்
10. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தின் (டாப்செட்கோ) மூலமாக கடன் வழங்கும் திட்;டம்.
11. தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் (டாம்கோ) மூலமாக கடன் வழங்கும் திட்டம்.
12. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்.
13. கிருத்துவ மகளிர் உதவும் சங்கம்.
14. கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளஅரசு நிதி உதவி வழங்குதல்.
திட்டங்கள்
1.கல்வி உதவித்தொகை
அ)பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித்தொகை:
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் முழுநேர மற்றும் இரண்டாவது முறை மாற்றம் மாலை நேர வகுப்புகளில் பட்ட மேற்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவ/ மாணவியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.இக்கல்வி உதவித்தொகைகள் பெற பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சம்.
1a) மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர மூன்றாண்டு பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
1b) பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப்படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்தொகை திட்டம்:-
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொழில்நுட்ப பயிலகங்களில் மூன்றாண்றான்டு பட்டயப்படிப்பு பயிலும் பிற்படுதப்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
1c) தொழிற்கல்வி படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித்nத்hகை திட்டம் :-
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொழில்கல்லுhரிகள் மற்றும் சுயநிதி தொழில்கல்லுhரிகளில் அரசு ஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ / மாணவியர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்nத்hகை வழங்கப்படுகிறது .
1d)சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை :-
• தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தைச் சார்ந்த மதவழி சிறுபான்மையினராக இருத்தல் வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட சுயநிதி கல்வி நிலையங்களில் பயில்பவராக இருத்தல் வேண்டும்
• பள்ளிப்படிப்பு – 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை
• பள்ளிப்படிப்பு – 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை
• தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை
• இது மத்திய அரசின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டமாகும். ஓப்பளிக்கப்பட்ட கல்வி உதவித்தொகையானது மாணவ, மாணவியரின் வங்கி கணக்கிற்கு நேரடியாக மின்னணு பரிமாற்றம் மூலம் வழங்கப்படும்
• குறைந்த வருமானம் , 30 மாணவியர்கள் என்ற அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெற தகுதிகள்
1.பள்ளிப்படிப்பு- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சம் .
2.பள்ளிப்மேற்படிப்பு- பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.00 இலட்சம்.
3.தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை – பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம்.
4.முந்தைய கல்வி ஆணடில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
5.சிறுபான்மையினருக்கான சாதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
6.ஒரு குடும்பத்தில் அதிக பட்சம் இரண்டு மாணவ / மாணவிகளுக்கு மட்டுமே கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
2.கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம்
கிராமப்புறங்களிலுள்ள பள்ளிகளில் மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்த பெண்குழந்தைகளுக்கு ஊராக பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் பயிலும் பெண் குழந்தைகள் இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு ஊக்கத்தொக வழங்கப்பட்டு வருகிறது
- 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 500/- வழங்கப்படுகிறது
- 6ம் வகுப்பு மாணவியருக்கு ரூ.1000/- வழங்கப்படுகிறது
- 4ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் விடுதியில் சேர தகுதியுடையவர்கள்
- பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் இருக்க வேண்டும்
3.கல்லூரி விடுதிகள்
- பட்டப்படிப்பு, பட்ட மேற்ப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு பயிலும் மாணவர்கள விடுதியில் சேர தகுதியுடையவர்கள்
- பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.1,00,000/- மிகாமல் இருக்க வேண்டும்
- மாணவ, மாணவியர் இருப்பிடம் கல்வி நிறுவனம் அமைந்துள்ள இடத்திலிருந்து குறைந்தது சுமார் 8 கி.மீ தொலைவில் இருக்க வேண்டும்.
- மேற்படி விதி மாணவியர் விடுதிகளுக்கு பொருந்தாது
- விபத்து நிவாரணம் ரூ.1,00,000/-
- இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000/-
- ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.5,000/-
- கல்வி உதவித்தொகை ரூ.1,000/- முதல் ரூ.8,000/- வரை
- திருமண உதவித்தொகை ரூ.2,000/-
- மகப்பேறு உதவித்தொகை ரூ.3,000/- முதல் ரூ.6,000/-
- மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ரூ.5,00/-
- முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000/-
- விபத்து நிவாரணம் ரூ.1,00,000/-
- இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை ரூ.20,000/-
- ஈமச்சடங்கிற்கான உதவித்தொகை ரூ.5,000/-
- கல்வி உதவித்தொகை ரூ.1,000/- முதல் ரூ.8,000/- வரை
- திருமண உதவித்தொகை ரூ.2,000/-
- மகப்பேறு உதவித்தொகை ரூ.3,000/- முதல் ரூ.6,000/-
- மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ரூ.5,00/
- முதியோர் ஓய்வூதியம் ரூ.1,000/-
- பொருளதாரத்தில் பின்தங்கிய சிறுபான்மையினத்தை சார்ந்த நபர்களுக்கு தனிநபர் கடன் சுய உதவிக்குழு கடன் மற்றும் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது, இக்கடனுதவி சிறுபான்மையினர் இன மக்களில் குடும்பத்தில் ஒரு நபருக்கு வழங்கப்படும்.
- ஆண்டு வருமானம், கிராமமாக இருந்தால் ரூ.98,000/- நகர்புறமாக இருந்தால் ரூ.1,03,000/-
- தமிழகத்தில் உள்ள கிறித்துவ தேவாலயங்கள் புனரமைத்தல் மற்றும் பழுது நீக்குதல் பணிகள் மேற்கொள்வதற்கான நிதியுதவி அளிக்கும் திட்டம் 2016-17 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
- இத்திட்டத்தில் தேவாலயம் பதிவு செய்யப்பட்டு சொந்தக்கூட்டத்தில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
- தேவாலயங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகள் மற்றும் தேவாலய கட்டடத்தின் வயது ஆகியவற்றயை கருத்தில் கொண்டு நிதி உதவிகள் வழங்கப்படும்.
உச்சபட்சமாக ரூ.3.00 இலட்சம் வரை அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. - தேவாலயம் சீரமைப்பு பணிக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் பெற்றிருத்தல் கூடாது.
- தேவாலய கட்டிடத்தின் வயதிற்கேற்ப 10-15 வருடம் வரை ரூ.1.00 இலட்சமும், 15-20 வருடம் வரை ரூ.2.00 இலட்சமும், 20 வருடத்திற்கு மேல் ரூ.3.00 இலட்சமும் யநிதி உதவி வழங்கப்படும்.
வரிசை எண் |
விடுதியின் விவரம் |
பிவ நல விடுதிகள் |
மிபிவ நல விடுதிகள் |
மொத்தம் |
---|---|---|---|---|
1 | பள்ளி மாணவர் விடுதி | 9 | 18 | 27 |
2 | பள்ளி மாணவியர் விடுதி | 10 | 13 | 23 |
3 | கல்லூரி மாணவர் விடுதி | 0 | 6 | 6 |
4 | கல்லூரி மாணவியர் விடுதி | 1 | 4 | 5 |
மொத்தம் | 20 | 41 | 61 |
வரிசை எண் |
விடுதியின் விவரம் |
அனுமதிக்கப்பட்ட மாணவ/ மாணவியர் எண்ணிக்கை |
---|---|---|
1 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, அரூர் | 60 |
2 | பி.ப நல மாணவியர் விடுதி, நரிப்பள்ளி | 70 |
3 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி,கடத்தூர் | 50 |
4 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, மல்லாபுரம் | 50 |
5 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, பாப்பிரெட்டிப்பட்டி | 50 |
6 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, ஆர்.கோபிநாதம்பட்டி | 55 |
7 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, ஜருகு | 50 |
8 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, அனுமந்தபுரம் | 60 |
9 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, செல்லமுடி | 55 |
10 | அரசு பி.ப நல மாணவியர் விடுதி, ஏரியுர் | 60 |
11 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, பையர்நத்தம் | 50 |
12 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, தருமபுரி | 65 |
13 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, கம்பைநல்லூர் | 55 |
14 | அரசு பி.பநல மாணவர் விடுதி, கிருஷ்ணாபுரம் | 50 |
15 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, பி.துறிஞ்சிப்பட்டி | 65 |
16 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, இராமியனஅள்ளி | 55 |
17 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, திருமல்வாடி | 50 |
18 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, மாரண்டஅள்ளி | 65 |
19 | அரசு பி.ப நல மாணவர் விடுதி, கே.என்.அள்ளி | 65 |
20 | அரசு பி.ப நல கல்லூரி மாணவியர் விடுதி, தருமபுரி | 75 |
மொத்தம் | 1155 |
வரிசை எண் |
விடுதியின் விவரம் |
அனுமதிக்கப்பட்ட மாணவ/ மாணவியர் எண்ணிக்கை |
---|---|---|
1 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,மாட்லாம்பட்டி | 50 |
3 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,மாங்கரை | 50 |
4 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,மொரப்புர் | 50 |
5 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,பென்னாகரம் | 100 |
6 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,பாலக்கோடு | 55 |
7 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,திருமல்வாடி | 55 |
8 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,சோலைக்கொட்டாய் | 50 |
9 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,பாப்பாரப்பட்டி | 65 |
10 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,பெரும்பாலை | 60 |
11 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,இலளிகம் | 55 |
12 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,தருமபுரி | 55 |
13 | அரசு மி.பி.ப நல மாணவியர் விடுதி,இருமத்தூர் | 50 |
14 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,பாப்பிரெட்டிப்பட்டி | 55 |
15 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,காளிபேட்டை | 55 |
16 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,பாலக்கோடு | 55 |
17 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,புலிக்கரை | 55 |
18 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,கோட்டப்பட்டி | 45 |
19 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி ,தொப்பூர் | 55 |
20 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,பெரும்பாலை | 60 |
21 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,அதியமான்கோட்டை | 55 |
22 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,பாளையம்புதூர் | 55 |
23 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,மொரப்புர் | 50 |
24 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,அளேதருமபுரி | 55 |
25 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,பென்னாகரம் | 50 |
26 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,மெணசி | 50 |
27 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,பண்டஅள்ளி | 50 |
28 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,மல்லுப்பட்டி | 60 |
29 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,அரூர் | 45 |
30 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,காரிமங்கலம் | 55 |
31 | அரசு மி.பி.ப நல மாணவர் விடுதி,பி.அக்ராஹரம் | 50 |
32 | அரசு மி.பி.ப நல கல்லூரி மாணவர் விடுதி,தருமபுரி. | 100 |
33 | அரசு மி.பி.ப நல ஐடிஐ கல்லூரி மாணவர் விடுதி,கடகத்தூர் | 100 |
34 | அரசு மி.பி.ப நல கல்லூரி மாணவியர் விடுதி,பாப்பாரப்பட்டி | 100 |
35 | அரசு மி.பி.ப நல கல்லூரி மாணவியர் விடுதி,காரிமங்கலம் | 100 |
36 | அரசு மி.பி.ப நல கல்லூரி மாணவியர் விடுதி,பாப்பிரெட்டிப்பட்டி | 100 |
37 | அரசு மி.பி.ப நல பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி, கெரகோடஅள்ளி. | 100 |
38 | அரசு மி.பி.ப நல கல்லூரி மாணவர் விடுதி,பாலக்கோடு | 100 |
39 | அரசு மி.பி.ப நல கல்லூரி மாணவியர் விடுதி,பாலக்கோடு | 100 |
40 | அரசு மி.பி.ப நல பொறியியல் கல்லூரி மாணவர் விடுதி, தருமபுரி. | 100 |
41 | அரசு மி.பி.ப நல கல்லூரி மாணவர் விடுதி, பாப்பிரெட்டிப்பட்டி | 100 |
மொத்தம் | 2705 |
வரிசை எண் |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் |
தகுதி |
---|---|---|
1. | நான்காம் வகுப்பு முதல் அனைவருக்கும் உணவு மற்றும் உறைவிடம் | நான்காம் வகுப்பு முதல் கல்லூரி வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் இன மாணவ/ மாணவியர் பள்ளிக்கும் வீட்டிற்கும் உள்ள தூரம் 8 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும்(இது மாணவியருக்கு பொருந்தாது) பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1.00 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். |
2. | மருத்துவ பரிசோதனை | விடுதிகளில் தங்கி பயிலும் அனைத்து மாணவ/ மாணவியருக்கும் வருடத்திற்கு மூன்று கட்டங்களாக மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்தப்படுகிறது. |
3. | பாய் மற்றும் போர்வை விடுதிகளில் தங்கிப்பயிலும் அனைத்து மாணவ/ மாணவிகளுக்கும் (பாய் ஆண்டுதோறும், போர்வை 2- ஆண்டுக்கு ஒரு முறை) | விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும். |
4. | இதர செலவினம் சோப்பு, எண்ணெய் போன்ற பல்வகைச் செலவினத்திற்கு கல்லூரி விடுதி மாணவர்களுக்கு ரூ.75/-ம்,பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூ.50/- வழங்கப்படும். | விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும். |
5. | சிறப்பு உணவு கட்டணம் பள்ளி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணாக்கர்களுக்கு ரூ.20/-ம் கல்லூரி மாணாக்கர்களுக்கு ரூ.40/- வழங்கப்படும்.பொங்கல், குடியரசு தினம், தமிழ்வருடப்பிறப்பு, சுதந்திர தினம், தீபாவளி ஆகிய நாட்களில் சிறப்பு உணவு வழங்கப்படும். | விடுதியில் தங்கி பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும்
|
6. | சீருடை | பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ/ மாணவியர்களுக்கு ஆண்டு தோறும் சீரூடை வழங்கப்படுகிறது. |
7 | சிறப்பு வழிகாட்டி மற்றும் வினா வங்கி | பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/ மாணவியர்களுக்கு வழங்கப்படுகிறது. |
8. | வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி | பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி பயிலும் 10-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் வேலை பெறுவதற்கான தகுதிபடுத்திக்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சிகள் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. |
9. | நாளிதழ்கள் | ஒவ்வொரு விடுதிக்கும் ஒரு ஆங்கிலம் மற்றும் இரண்டு தமிழ் நாளிதழ்கள் வழங்கப்படுகிறன்றது. |
5.விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த மாணவ/ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது.
6.விலையில்லா சலவைப்பெட்டிகள் மற்றும் விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்:-
விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்:
சலவை தொêல் புரியும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும்; சீர்மரபினர் வகுப்புகளைச் சேர்ந்த நபர்களுக்கு சலவைப்பெட்டி வழங்கப்பட்டு வருகிறது. பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல் :
20 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளைச் சார்ந்த தையல் கலை அறிந்தவர்களுக்கு விலையில்லா தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
7.இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குதல்:
• பயனாளி பிவ/மிபிவ இனத்தை சார்ந்தவராகவும் வீடு மற்றும் வீட்டுமனை இல்லாதவராகவும் இருக்க வேண்டும்.
• பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகமால் இருக்க வேண்டும்.
8.நரிக்குறவர் நல வாரியம்
• நல வாரிய உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடிக்கு உதவித்தொகை, விபத்தினால் ஏற்படும் ஊனத்திற்கான உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, முதியோர் ஒய்வு+தியம் ஆகிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
9. உலமாக்கள் (ம) பணியாளர்கள் நல வாரியம்
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள்,பேஸ் இமாம்கள்,அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலாலாக்ள மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள் ,தைக்காக்கள், ஆஷ்ர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட 18 முதல் 60 வயது உள்ள பணியாளர்கள் இவ்வாரியத்தில் உறுப்பினராக தகுதியுடையவர்கள். தருமபுரி மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் 252 பணியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நல உதவிகள்
10.தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம்:-
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் இன நபர்களுக்கு தனிநபர் கடன், சுய உதவிக்குழு கடன் மற்றும் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இக்கடனுதவி பெற பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர் இன மக்களில் குடும்பத்தில் ஒரு நபருக்கு ஆண்டு வருமானம் ரூ.3,00,000/- மிகாமல் இருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது மேல் 60 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.
அ)தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆழ்துளை கிணறு அமைத்தல்:-
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் சிறு, குறு விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்க 50 சதவீத மானியம் மூலம் கடன் வழங்கும் திட்டத்தில் இதுவரை 144 பயனாளிகளுக்கு ரூ.67.66 இலட்சத்திற்கு மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
11.தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்:
12. முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம்
ஆதரவற்ற ஏழ்மை நிலையில் உள்ள முஸ்லீம் மகளிருக்கு உதவும் பொருட்டு முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் 2007-ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
13. கிருத்துவ மகளிர் உதவும் சங்கம்
ஆதரவற்ற கிறித்துவ விதவைகளுக்கு உதவும் பொருட்டு கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் 2018- ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
14. கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ளஅரசு நிதி உதவி வழங்குதல்:
பெயர் / பதவி | தொடர்பு எண் | மின்னஞ்சல் முகவரி | முகவரி |
---|---|---|---|
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்,தர்மபுரி | 04342-231861,231116 | dbcwodpi[dot]tn[at]nic[dot]in | மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம்,தர்மபுரி-636705 |
பயனாளி:
BC/MBC/DNC சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நன்மைகளைப் பெறலாம்.
பயன்கள்:
உதவித்தொகை மற்றும் நலத்திட்டங்கள்
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களுக்கு உதவித்தொகை பெற – சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும் ,நலத்திட்டங்கள் உதவி பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும்